கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் என்ன வேணும்னாலும் செய்வீங்க...அதை நாங்க வேடிக்கை பார்க்கனுமா...தெறிக்கவிட்ட கனிமொழி

Google Oneindia Tamil News

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரையும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அந்த நிகழ்வை கண்டித்தும் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Recommended Video

    கோவை: பொள்ளாச்சி போராட்டம்... தடுத்து நிறுத்திய போலீசார்.. சாலையில் தர்ணா செய்த கனிமொழி..!

    காவல்துறை தடையை மீறி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய கனிமொழி, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதிமுகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும் அதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது எனவும் எச்சரித்தார்.

    மழை, புயல்னு லீவு விட்டப்பலாம் எங்கள கண்டுக்கல.. இப்ப மட்டும் பங்கு கேட்டு வந்துட்டியே குமாரு!மழை, புயல்னு லீவு விட்டப்பலாம் எங்கள கண்டுக்கல.. இப்ப மட்டும் பங்கு கேட்டு வந்துட்டியே குமாரு!

     பொள்ளாசி

    பொள்ளாசி

    பொள்ளாசி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக மாணவரணி பொறுப்பில் இருந்த அருளானந்தம் என்பவனை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அருளானந்தம் சில அமைச்சர்களோடு நெருக்கமான நிற்கும் புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இதில் தொடர்புடையவர்களை கண்டித்தும் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    அதன்படி இன்று பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வழியில் கனிமொழி எம்.பி.யின் கார் ஈச்சனாரி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த கனிமொழி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கனிமொழி எம்.பி.யாக உள்ளதால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் வரை கொண்டு செல்லக் கூடும் என்பதால் பிறகு அவருக்கு அனுமதி தரப்பட்டது.

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    மிகுந்த கோபத்துடன் பொள்ளாச்சி ஆர்ப்பாட்ட மேடையில் ஏறிய கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை திமுக ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என பேசினார்.

    அருளானந்தம்

    அருளானந்தம்

    இதனிடையே அதிமுக மாணவரணி பொறுப்பில் இருந்து இப்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் என்பவன், அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களோடு நிற்கும் புகைப்படங்களை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் கனிமொழியிடம் வழங்கினார். அதனை சுட்டிக்காட்டி பேசிய கனிமொழி, ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதிமுகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா என வினவினார்.

    அதிமுக அரசு

    அதிமுக அரசு

    திமுக ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அதிமுக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பொள்ளாச்சி விவகாரத்தில் போராட்டத்தை கைவிடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

    English summary
    Kanimozhi was led protest in Pollachi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X