கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆத்தாடி எந்தா தண்டி.. ஈஷா யோகா மையத்திற்குள் வந்த அழையா விருந்தாளி.. அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கோவை: ஒன்றல்ல.. இரண்டல்ல.. 12 அடி ராஜநாகம் பாம்பு கோவை அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் சிக்கியுள்ளது.

கோவை அருகே, வெள்ளியங்கிரியில், அமைந்துள்ளது, சத்குரு ஜக்கி வாசுதேவின், புகழ்பெற்ற ஈஷா யோகா மையம். யோகா கலையை பயில்வதற்காக இங்கே பலநூறு பேர் தங்கி உள்ளார்கள்.

இதுதவிர 2 வருடங்கள் முன்பாக ஈஷா யோகா மையத்தில், ஜக்கி வாசுதேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட, தியானலிங்கம் போன்றவற்றை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து செல்கிறார்கள்.

வனத்துறை

வனத்துறை

இந்த நிலையில்தான், 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று ஈஷா யோக மையத்திற்கு நேற்று வந்துள்ளது. இதை பார்த்த ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பூளுவாம்பட்டி சரக வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

நிஜமாவே இவர் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் தான்.. ஆனா பீர் பாட்டிலை மட்டும் குச்சில திறப்பாரு!நிஜமாவே இவர் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் தான்.. ஆனா பீர் பாட்டிலை மட்டும் குச்சில திறப்பாரு!

வீடியோ

வீடியோ

வனத்துறையினர், அந்த பாம்பை லாவகமாக பிடித்து சிறுவாணி அணைக்கட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். முன்னதாக, அந்த ராஜ நாகப்பாம்பை ஈஷா யோக மையத்தின் தன்னார்வலர் ஒருவர் கையில் பிடித்து வைத்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடர்ந்த வனம்

அடர்ந்த வனம்

பொதுவாக ராஜநாகம் அடர்ந்த வனங்கள், கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் மட்டுமே இருக்கக் கூடியவை. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இதுபோன்ற ராஜநாகம் அதிகம். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ராஜநாகம் அதிகமாக வாழ்கிறது.

கொடிய விஷம்

ராஜநாகம் மிக மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்பு வகை. மற்ற பாம்புகளைவிடவும், விஷத்தன்மை மிக அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பாம்பு தீண்டினால், உடனடியாக அந்த நபர்களை, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தாவிட்டால், அவர்கள், உயிர் பிழைப்பதே கடினம். கோவை மற்றும் அதை சுற்றி உள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈஷா பாம்பு மோதிரம் அணிய வேண்டும் என்ற கொள்கை கொண்டது. எனவே பக்தர்கள், அதனுடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில், பாம்பு வருகை குறித்து பேசுவதையும் பார்க்க முடிகிறது.

English summary
King Cobra has found near Isha Yoga Centre and the volunteers informed Forest officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X