கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 வயது மலரை கருக்கிய காம கொடூரனுக்கு தூக்கு.. கோவை போக்சோ கோர்ட்டின் முதல் அதிரடி மரண தண்டனை..!

6 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    போக்சோ வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றம்: விசாரணை உடனடியாக துவக்கம்!

    கோவை: சில்மிஷம், டார்ச்சர், பலாத்காரம் என்று இனி ஒரு பயலும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க சாட்டையை கையில் எடுத்துள்ளது கோவை போக்சோ கோர்ட்.. முதன்முறையாக 6 வயது குழந்தையை நாசம் செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தந்து உத்தரவிட்டுள்ளது!

    சமீப காலமாக கோவை மாவட்டத்தில் ஏராளமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன.. இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் ஒரு எல்லையே இல்லாமல் அதிகரித்து வருகின்றன. கல்லூரி, பள்ளி, டியூஷன்கள் என இந்த பெண்கள் எங்கு போனாலும், பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகின்றன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    kovai bocso court death sentence to santhosh kumar

    சில மாதங்களுக்கு முன்பு, கோவை தடாகம் பக்கத்தில் 6 வயது சிறுமியை நாசம் செய்து கொலை செய்தனர்.. இதற்கு பிறகு பொள்ளாச்சி கும்பலின் அட்டகாசம் வெளியே வந்தது.. இந்த அதிர்ச்சி முடிவதற்குள் காளப் பட்டி அருகே சிறுமி ஒருத்தியை சீரழித்து கொன்றனர்.. இன்னும் எத்தனை குழந்தைகள், இளம்பெண்கள் காமவெறியர்களுக்கு வேட்டையாடப்பட்டனர்.. இவர்களில் பலர் கைதாகினாலும், பாலியல் அக்கிரமம் இன்னும் தொடர்ந்தபடியேதான் உள்ளது.

    இதனிடையே, அதாவது, கடந்த 2018 ஏப்ரல் மாதம் போக்சோ சட்ட திருத்தம் புதிதாக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் இருப்பதுதான் இந்த போக்சோ சட்டம்.. இதன்படி குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 7 முதல் அதிகப்பட்சமாக ஆயுள் வரை தண்டனை விதிக்கப்படும்.

    டிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்!டிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்!

    பெரும்பாலும் மகளிர் கோர்ட்களில் இந்த போக்சோ கேஸ்கள் விசாரிக்கப்பட்டதால், கோவை மாவட்டத்தில் நிலுவை வழக்குகள் அதிகமாகிவிட்டன. அதனால் போக்சோவுக்கு என்றே தனியாக ஒரு சிறப்பு கோர்ட் அமைக்க சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும், 125 போக்சோ வழக்குகள் தேங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

    இதையடுத்து, உரிய அனுமதியை பெற்று கோவையில் சிறப்பு கோர்ட் உருவானது. இப்போது பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்த கோர்ட் மிக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்தான் கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் கை, காலை கட்டி, பலாத்காரம் செய்த வழக்கில் 32 வயது சந்தோஷ்குமார் என்பவர் கைதானார்.

    இது சம்பந்தப்பட்ட வழக்கை இந்த போக்சோ கோர்ட்தான் இதுநாள் வரை விசாரித்து வந்த நிலையில், இன்று சந்தோஷூக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. போக்சோ கோர்ட்டில் முதல் முதலாக வழங்கப்படும் தூக்கு இதுவாகும்.. பெண் குழந்தைகளை சீரழித்தால், அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு உதாரணம் ஆகும்!

    English summary
    coimbatore bosco court convicts Santosh Kumar for 6 year old girl rape and murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X