கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை

Google Oneindia Tamil News

கோவை: நகைக்காக..துண்டு துண்டாக பெண்ணை வெட்டி கொன்று, 3 சூட்கேஸ்களில் அடைத்து வைத்த கொடூர வழக்கில் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை விதித்துள்ளது.

2013.. பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இது: அவிநாசி ரோடு, "ரஹேஜா' தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் நடராஜ். இவரது மனைவி சரோஜினி. வயது 54!

இவர் வீட்டுக்கு எதிரே யாசர் அராபத் என்ற 23 வயது இளைஞர் குடியிருந்தார். 16ம் தேதி திடீரென சரோஜினியை காணவில்லை. இதனால் ரேஸ்கோர்ஸ் போலீசில்குடும்பத்தினர் புகார் செய்தனர். அந்த சமயத்தில், யாசர் அராபத் தங்கியிருந்த வீட்டிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசியதாக அங்கு வசித்து வந்தோர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

வாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்புவாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

3 சூட்கேஸ்கள்

3 சூட்கேஸ்கள்

இதையடுத்து விரைந்து வந்த போலீசார், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 3 சூட்கேஸ்களிலிருந்துதான் துர்நாற்றம் வீசுவது தெரிந்தது. இதையடுத்து சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது, ஆறு துண்டுகளாக வெட்டிய நிலையில், பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, சூட்கேஸ்கள் மீது சிமென்ட் பூசி, தண்ணீர் ஊற்றியிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.

கைது

கைது

அவரிடம் நடத்திய விசாரணையில், "கையில் பணம் இல்லை. அதனால் சரோஜினியை என் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்று சொல்லி அழைத்தேன். என் வீட்டுக்கு வந்ததும், அடுப்பை பற்ற வைக்க அவர் குனிந்தார். அப்போது அவரை நான் அணைத்தேன். அவர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதால் அவரது கழுத்தை நெறித்தேன். 10 நிமிடம் போராடி அவரை கொலை செய்தேன். அதன்பிறகுதான் நகைகளை கொள்ளையடித்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

வழக்கு

வழக்கு

இதையடுத்து, போலீசார் அவரை விரைந்து சென்று கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இந்த யாசர் அராபத். இது சம்பந்தமான வழக்கு கோவை மாவட்ட நான்காவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தூக்கு

தூக்கு

6 ஆண்டு கால முழு விசாரணை நடைபெற்ற நிலையில், கொலையாளி யாசர் அராபத்திற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பூரணஜெயானந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். தமிழக மக்களை அன்று குலைநடுங்க வைத்த இந்த கொடூர கொலை சம்பவ வழக்கில், இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பினை தந்துள்ளது.

English summary
Death Penalty with seven year jail for Culprit Yasar Arafat in 2013 Woman Murder case by Kovai Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X