கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைல்ட் லைன் இருக்கு.. சட்டம் இருக்கு.. இருந்தும் ஏன் தவறுகள் நடக்கிறது.. லதா ரஜினிகாந்த் கேள்வி

குழந்தைகள் நலன் காக்கப்பட வேண்டும் என லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Latha Rajinikanth: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன : லதா ரஜினிகாந்த்- வீடியோ

    கோவை: "சைல்ட் லைன் இருக்கு.. இன்னும் நிறைய இருக்கு.. நிறைய பேர் இருக்காங்க... ஆனாலும் ஏன் தவறுகள் நடக்கிறது?" என்று லதா ரஜினிகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா குழந்தைகள் பாதுகாப்பிற்காக 'தயா பவுண்டேசன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன்படி, கோவையிலும் இந்த அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    "குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை (பீஸ் பார் சில்ட்ரன்) ஏற்படுத்தி உள்ளோம். இதனை ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளோம். அதற்காக ஒரு ஆலோசனைகூட்டம்தான் இது.

    அதிர்ச்சி.. உ.பி சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்! அதிர்ச்சி.. உ.பி சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்!

    பாகுபாடு இல்லை

    பாகுபாடு இல்லை

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா இடங்களிலும், வயசு பாகுபாடே இல்லாமல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை. இதுகுறித்த விழிப்புணர்வு வர வேண்டும்.

    திணிக்கப்படுகிறது

    திணிக்கப்படுகிறது

    இந்த காலத்தில் தனிதனியாக குடும்பங்கள் இருக்கின்றன. அதனால் குழந்தைகளுக்காக நேரமே ஒதுக்க முடியாத நிலை இருக்கிறது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும். பெரியவர்கள் உலகில் நடக்கிற பிரச்சனைகள் அப்படியே குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது.

    புகார் அளியுங்கள்

    புகார் அளியுங்கள்

    சைல்ட் லைன் இருக்கு.. இன்னும் நிறைய இருக்கு.. நிறைய பேர் இருக்காங்க... ஆனாலும் ஏன் தவறுகள் நடக்கிறது? இதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை யாராவது பார்த்தால், உடனடியாக தகவல் அளியுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும்" என்றார் லதா.

    English summary
    Latha Rajinkanth worried about crimes against children in Tamilnadu and she urges we should stop it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X