கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதை ஓவராகி.. மசூதி மீது கல்லை விட்டு எறிந்த மனோஜ்.. பெரிய நாயக்கன்பாளையம் பரபரப்பு!

கோவை அருகே மசூதி மீது கல்லெறிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கோவை: போதை தலைக்கேறி.. மசூதி மீது கல்லெறிந்துவிட்டார் ஒரு இளைஞர்.. அவரை கோழி அமுக்குவது போல சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர் கோவை போலீசார்!

Recommended Video

    மசூதி மீது கல் வீசியவரைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!

    டாஸ்மாக் திறந்த அன்று ஏகப்பட்ட வன்முறைகள் நடந்தன.. சொந்த வீட்டுக்குள்ளேயே அண்ணனை தம்பி கொன்றார்.. இன்னொரு இடத்தில் அப்பாவை மகன் கொன்றார்.. தங்கையை சகோதரன் கொன்றார்.. இதுபோக போதையில் வண்டிகளை ஓட்டி... அந்த வண்டிகள் விபத்து ஏற்பட்டு நடுரோட்டிலேயே குப்புற கவிழ்ந்துவிட்டன.

    lockdown: drunkard fellow arrested in coimbatore

    இதுபோலவே கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இங்குள் பஸ் ஸ்டேண்ட் பின்புறம் சுன்னத் ஜமாத் மசூதி உள்ளது... அங்கு சம்பவத்தன்று இரவு தொழுகைக்காக பாங்கு சத்தம் எழுப்பப்பட்டது.. அந்த சமயத்தில் பள்ளிவாசலின் மாடி பகுதியில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருப்பதும், அருகிலேயே பெரிய கல் ஒன்று இருந்ததும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனடியக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் ஒரு இளைஞர் மீது சந்தேகம் வந்தது.. அந்த தெருவில் சந்தேகத்துக்குரிய வகையில் நண்பர்களுடன் நடமாடி கொண்டிருந்தார்.

    பேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சிபேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சி

    சற்று நேரத்தில் அவரை சுற்றி வளைத்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அவர் பெயர் மனோஜ் என்பது தெரியவந்தது.. போதையில் நண்பர்களுடன் சண்டை வந்துள்ளது.. அப்போது நண்பர்கள் மீது கல்லை தூக்கி அடித்துள்ளார்.. அந்த கல் பள்ளிவாசலில் தெரியாமல் பட்டுவிட்டதாக கூறினார்..இதையடுத்து, மனோஜை போலீஸார் கைது செய்தனர். அதேசமயம், கைதான மனோஜ் எந்த கட்சியையோ, அமைப்புகளையோ சேர்ந்தவர் இல்லை என்பதையும் போலீசார் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    English summary
    Coimbatore police has arrested a youth for attacking mosque.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X