கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு: கோவையில் மக்கள் பாதை அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

கோவை: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி கோவையில் மக்கள் பாதை அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

    நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாதை அமைப்பினர்

    நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி சென்னையில் 6 நாட்களாக மக்கள் பாதை அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    Makkal Pathai Protest against NEET in Coimbatore

    இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை அமைப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை சித்தா புதூரிலுள்ள மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் 15 க்கும் மேற்பட்டோர், நீட் தேர்வை ரத்து செய்யகோரியும், சென்னையில் போராட்டக்காரர்கள் கைதை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீட் தேர்வு... பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கிறது... சீமான் காட்டம்!!நீட் தேர்வு... பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கிறது... சீமான் காட்டம்!!

    தமிழகத்தில் அனைத்து கட்சிகள் நீட் தேர்விற்கு எதிராக குரல் எழுப்பினாலும், மத்திய அரசு நீட்டை கொண்டு வந்து ஏழை மாணவர்களை பலி வாங்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முன் நிறைய மாணவர்கள் மருத்துவராகி வந்ததாகவும், தற்போது நீட் தேர்வால் குறைவானவர்களே மருத்துவம் படிப்பதாக அவர்கள் கூறினர்.

    Makkal Pathai Protest against NEET in Coimbatore

    நீட் தேர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி , நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய அறவழியில் மக்கள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் பாதை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Makkal Pathai movement hold hunger Strike Protest against NEET Exams in Coimbatore on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X