• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. கோவமா இருக்கார்.. சமாதானம் செய்ய வந்தேன்.. தமிழினி பரபர வாக்குமூலம்

Google Oneindia Tamil News

கோவை: "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. என் மேல கோவமா இருக்கார்.. அதனால அவரை பார்த்து சமாதானம் செய்யவே வந்தேன்... என்னை யாரும் கடத்தவில்லை" என்று சாதி மறுப்பு திருமணம் செய்த தமிழினி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றினை போலீசில் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.. இவர் சக்தி தமிழனி பிரபா என்பவரை காதலித்தார்.

இருவருமே வேறு வேறு சாதி என்பதால், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 ம் தேதி 2 பேரும் கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை கல்யாணம் செய்து கொண்டனர்.

 சென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது? சென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது?

தமிழினி

தமிழினி

கார்த்திகேயன் வீட்டில் அவ்வளவாக எதிர்ப்பு இல்லை.. ஆனால் தமிழனி வீட்டில் கொந்தளித்து விட்டனர்.. இதனால் எப்படியும் தங்களது எதிர்ப்பு வரும் கிளம்பியதால், மாவட்ட பதிவாளர் ஆபீசில் ரிஜஸ்தர் செய்து கொண்டனர்.. பிறகு ஒரு வீடு எடுத்து தம்பதி வசிக்கவும் ஆரம்பித்தனர்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

கடந்த வெள்ளிக்கிழமை ராத்திரி, தமிழினியின் பெற்றோரும், சொந்தக்காரர்களும் கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்... திடீரென அவர்களை பார்த்ததும் தம்பதிக்கு எதுவுமே புரியவில்லை.. அடுத்த நிமிஷமே கார்த்திகேயனையும், அவரது அம்மாவையும் தாக்கிவிட்டு, மகளை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகினது.

புகார்

புகார்

படுகாயமடைந்த வசந்தகுமாரி உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. கார்த்திகேயன் நடந்த சம்பவம் குறித்து துடியலூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. மேலும் தன் மனைவியை ஆணவக்கொலை செய்து விடுவார்களோ என்று பயமாக உள்ளதாகவும், மனைவியை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்தார்.

சிசிடிவி

சிசிடிவி

இதையடுத்து துடியலூர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. முதல்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி ஆய்வு செய்தனர்.. அப்போது மகளை பெற்றோர் அடித்து உதைத்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.. இது சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், தற்போது மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. அதில், நைட்டியுடன் மகளை தெருவில் இழுத்து கொண்டு வருகிறார்கள் பெற்றோர்.

 ஆணவ கொலை?

ஆணவ கொலை?

தமிழினி அவர்களுடன் செல்ல மறுக்கவும், அவரது அம்மா, அம்மா இருவருமே சரமாரியாக அடிக்கிறார்கள்.. பெண்ணை இழுத்து செல்லும்போது, உறவினர்களும் செல்கிறார்கள்.. அதை தடுக்க வந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்களை கும்பல், கட்டை மற்றும் கற்களை தூக்கி வீசி விரட்டுவதும் பதிவாகி உள்ளது... மேலும் கார்த்திகேயன் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள்.. இந்த வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.. வீடியோவில் வருவது யார் என்பது குறித்தும், தமிழினி பிரபா கடத்தி சென்றது குறித்தும் தனிப்படை போலீசார் திருச்சியில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தினர்.

 கோபம்

கோபம்

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தன்னை யாரும் கடத்தவில்லை என்று தமிழினி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.. "அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால், அவரை பார்க்க வந்தேன்.. அவர் என் மீது கோபமாக இருப்பதால் சமாதானம் செய்யவும் வந்திருக்கிறேன்.. ஆனால் என்னை யாரும் கடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளாராம். மனைவியை கடத்தி கொண்டு போய்விட்டார்கள் என்று கணவன் புகார் தந்த நிலையிலும், பெற்றோர் இருவருமே மகளை தெருவெல்லாம அடித்து இழுத்து கொண்டு போனது சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையிலும் இப்படி ஒரு வாக்குமூலத்தை தமிழினி தெரிவித்துள்ளார்.

 வழக்கறிஞர்

வழக்கறிஞர்

இதையடுத்து, கார்த்திகேயனின் வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சாதி மறுப்பு திருமணம் செய்த தமிழினியின் பெற்றோரும் மற்றும் கூலிப்படையினர் அவரது கணவரையும், கணவரின் தாயையும் கொடூரமாக தாக்கிவிட்டு, தமிழினியை அடித்து கடத்தி இழுத்து செல்லும் வீடியோக்கள் வெளியானது.. இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க போலீசாரும் திருச்சி சென்றனர்.

 திருச்சி

திருச்சி

தமிழினை அழைத்து சென்று திருச்சி காவல் நிலையத்தில் விசாரித்ததாகவும், அந்த விசாரணையில் பெற்றோரை சமாதானம் செய்யவே வந்ததாகவும, சில தினங்களில் சமாதானம் செய்துவிட்டு கணவர் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று தமிழினி தெரிவித்ததாகவும் அதனால் அந்த பெண்ணை திருச்சியிலேயே விட்டுவிட்டு வந்ததாக போலீசார் மூலம் தகவல் தெரிகிறது. கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையில் உயர் அதிகாரி என்பதால் காவல்துறை இந்த பிரச்சனையை மென்மையாக கையாள்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

பேட்டி

பேட்டி

எனவே இந்த புகாரை பதிவு செய்த துடியலூர் காவல் நிலையத்துக்கு தமிழினியை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும், அடித்து கடத்தி சென்ற வீடியோக்கள் மிக தெளிவாக உள்ளதால் தற்போது பெண்ணை மிரட்டி இப்படி சொல்ல வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.. கோவை மாவட்ட எஸ்பி இந்த பிரச்சனையை துரிதமாக விசாரித்து, பெண்ணை மீட்டு கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

English summary
married woman being abducted by her parents, another cctv video goes viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X