கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை

Google Oneindia Tamil News

கோவை: நிலவில் பாதுகாப்பான இடத்தில் தான் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 விண்கலம் நாளை நள்ளிரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிலவின் தென்துருவ பகுதியில் இது வரை உலகின் எந்த நாடும் ஆராய்ச்சி செய்ததில்லை. சவாலான இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிக்கும் பணியில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

mayilsamy annadurai about Chandrayaan-2s lander Vikram will soft-landing on the Moon

இந்தியாவின் புகழை உயரச்செய்யும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நாட்டு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் சந்திரயான் ஒன்று திட்ட இயக்குனராக இருந்தவருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்றார். இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரைறங்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில் ஒரு சில மீட்டர் முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்றும் கூறினார். நிலவில் என்னென்ன கனிம வளங்கள் உள்ளன என்பது பற்றி 2 முதல் 14 நாட்கள் ஆய்வு நடத்தும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

English summary
isro scientist mayilsamy annadurai about Chandrayaan-2's lander 'Vikram' soft-landing on the south pole of the moon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X