காவி வேட்டி, துண்டு..! வெள்ளியங்கிரியில் பயபக்தியுடன் மலையேறிய அமைச்சர் சேகர்பாபு! இது தான் காரணமா?
கோவை : கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு கோயிலின் தேவைகள் குறித்தும், பக்தரின் வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர் வெள்ளிங்கிரி மலைக்கு நடைபாதையாக சென்று மலைபாதைகளை பார்வையிட்டார்.