கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க.. தம்ஸ் அப் போஸ்.. கலக்கும் அமைச்சர் வேலுமணி போஸ்டர்.. ஆமா அது என்ன 50/5?

அமைச்சர் எஸ்பி வேலுமணியின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க| அமைச்சர் வேலுமணி போஸ்டர் | coimbatore is the first to implement

    கோவை: கோவை மாநகர சுவர்களே புளூ கலர் போஸ்டர்களில் மின்னுகிறது.. வித்தியாசமான கெட்-அப்பில் அமைச்சர் வேலுமணி தம்ஸ் அப் போஸ் கொடுத்துள்ளார்! 50/5 என்ற என்கிற இந்த போஸ்டர்கள்தான் இப்போது வைரலாகி வருகிறது.

    தமிழக அமைச்சர்களில் மிக முக்கியமானவர் வேலுமணி.. முதல்கட்ட அமைச்சர்களின் வரிசையில் இவர்தான் முன்னிலை.. பார்க்க படு சீரியஸாக தெரிவார்.. ஆனால் அரசியலில் அத்தனையும் அத்துப்படி.. தமிழக பிரச்சனைகளை டெல்லி வரை கொண்டு சென்று விரிவாக பேசி.. தீர்வு காண்பார். இதெல்லாம்தான் நாம் இதுவரை பார்த்த அமைச்சர் வேலுமணி!

    minister sp velumanis posters viral in kovai

    ஆனால் சில தினங்களுக்கு முன்பு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றினை பேசி வெளியிட்டிருந்தார். அதில், வழக்கமான ஒயிட் & ஒயிட் டிரஸ்-க்கு பதிலாக டீசர்ட்டில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார் வேலுமணி.

    இப்போது திரும்பவும் அதேபோல ஒரு வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே ஒயின் & ஒயிட்தான்.. ஆனால் புளூ கலர் பின்னணியில் தம்ஸ் அப் போஸ் தருகிறார் அமைச்சர்!

    50/5 என்ற குறியீடும், அதற்கு கீழே "நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க" என்ற வாசகமும் உள்ளது.
    தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயலாக்கத்தில், கோவை மாநகராட்.சி முதலிடம் பிடித்திருக்கிறது. அதனால்தான் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சீப்பை ஒளித்து வைத்தால் ஆச்சா.. மூல பத்திரம் எங்கே.. முரசொலி ஓனர் எங்கே.... விடாமல் விரட்டும் பாஜக!சீப்பை ஒளித்து வைத்தால் ஆச்சா.. மூல பத்திரம் எங்கே.. முரசொலி ஓனர் எங்கே.... விடாமல் விரட்டும் பாஜக!

    எனினும், 'நம்ம கோவை னா ஸ்மார்ட்டுங்க' என்று குறிப்பிட்டு, கொங்குமண்டல மக்களின் மனசை ஒட்டுமொத்தமாக அள்ளி கவருகிறது இந்த போஸ்டர்.. ஆனால், ஒன்னே ஒன்றுதான் புரியவில்லையாம்.. அது என்ன "50/5" என்ற குறியீடு? இதன் அர்த்தம் என்ன?

    "அதிமுக ஆட்சியில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்டம் பெற்றுள்ளதாகவும், சென்னையை விட கோவையில்தான் மிகப்பெரிய பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அமைச்சர் வேலுமணி 2 நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஒருவேளை அந்த 50 வருடம்தான் இந்த 50-ன் குறியீடா என தெரியவில்லை. அதேபோல, 5 என்ற குறியீட்டுக்கும் அர்த்தம் புரியவில்லை..

    தம்ஸ் அப் சிக்னலுடன் வேலுமணியின் போஸ்டர்கள் பரபரத்தாலும், இந்த 50/5 என்பதற்கு மட்டும் இன்னமும் அர்த்தம் புரியவே இல்லை.

    English summary
    coimbatore is the first to implement the Smart City project and regarding this Minister sp velumanis posters go viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X