கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் எத்தனை நல்ல திட்டங்கள் செய்தும் பலனில்லை. மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் திமுக, சேலம் ஆகிய தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

Minister Velumani upset over people who has not voted for ADMK

மேலும் அதிமுகவின் கோட்டை என கூறப்படும் தொகுதிகளை திமுக கூட்டணி சல்லி சல்லியாக நொறுக்கியது. குறிப்பாக அதிமுக கோட்டை எனப்படும் பொள்ளாச்ச, கோவையை திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் பிடித்தது.

இது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கோவையில் பல திட்டங்களை செயல்படுத்தியும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காதது புதிராக உள்ளது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Minister SP Velumani upset over people who has not voted for ADMK in Coimbatore. He has said that People can vote only for those who have not worked for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X