கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்காமல் போயிருந்தால்?.. ஸ்டாலின் உருக்கம்- வீடியோ

    சூலூர்: மெரினாவில் இடம் வேண்டும் என்ற தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.

    சூலூர் பேருந்து நிலையம் முன்பாக, சூலூர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சூலூருக்கு வந்தால் மறைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நினைவுக்கு வருகிறார். சூலூருக்கு சிறுவாணி குடிநீர் திட்டம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் பொன்முடி.

    3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை! 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!

    விலையேற்றம்

    விலையேற்றம்

    அந்த சிறுவாணி தண்ணீர் முழுமையான அளவு இன்னமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. பொங்கலூர் பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின் முழுமையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது.

    நேராக எப்படி

    நேராக எப்படி

    இவை அனைத்தும் குறைக்கப்படும் என திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம்.

    சீரியல் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு எங்களை பார்க்க மக்கள் வந்துள்ளீர்கள். டி.வியில் பார்த்தால் ஓரளவு நல்லா இருக்காரே, நேராக பார்த்தால் எப்படி இருப்பார் என பார்க்க வந்திருக்கிறீர்கள்.

    மணி மண்டபம்

    மணி மண்டபம்

    வீடுகளில் 300 ரூபாய் கேபிள் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது, திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் 100 -ஆக குறைக்கப்படும்.

    தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த பொல்லானுக்கு சிலை வைக்கப்படும். மணி மண்டபம் கட்டப்படும்.

    ஆட்சியாளர்கள் மறுப்பு

    ஆட்சியாளர்கள் மறுப்பு

    மோடியை வீட்டிற்கு அனுப்ப ஓட்டுப் போட்டதை போல எடப்பாடி வீட்டிற்கு போக இந்த தேர்தலில் வாக்களியுங்கள். தற்போது நடைபெறும் இந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி, கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் மறுத்தார்கள்.

    உருக்கமான ஸ்டாலின்

    உருக்கமான ஸ்டாலின்

    நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்தோம். அண்ணாவின் அருகில் கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசை நிறைவேறாமல் இருந்திருந்தால்
    நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என பிரசாரத்தின் போது ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

    English summary
    DMK President MK Stalin says that he would have been dead if he didnt fulfull his last dreamt of Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X