கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆறுக்குட்டி ஒரு இடத்தில் இருந்தாலே.. ஆடல்தான் பாடல்தான்.. குஷிதான்!

பள்ளி மாணவிகளுக்கு பாட்டு பாடி லேப்டாப் வழங்கினார் ஆறுக்குட்டி.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார் ஆறுக்குட்டி எம்எல்ஏ!!- வீடியோ

    கோவை: வழக்கம்போல் உற்சாகத்துடன் பாட்டு பாடி மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார் ஆறுக்குட்டி எம்எல்ஏ!!

    கவுண்டம்பாளையம் எம்எல்ஏதான் ஆறுக்குட்டி. இவர் எப்போதும் பாடுவார், சில சமயம் டான்ஸ் ஆடி எல்லாரையும் குஷிப்படுத்திவிடுவார்.

    இப்படித்தான் கடந்தமுறை சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தி, அதிமுக அரசு செய்த சாதனைகளை கிராமிய பாடல்களாக பாட ஆரம்பித்துவிட்டார். இதோ முடித்துவிடுவார் என்று சபையில் பார்த்தார்கள்.

    [திரும்ப திரும்ப பெரியாரையே வம்பிக்கிழுக்கும் எச். ராஜா.. ஏன் இப்படி.. எதற்காக இந்த வம்படி??]

    தமிழ் மாதங்கள்

    தமிழ் மாதங்கள்

    ஆனால் ஆறுக்குட்டி ரொம்ப நேரத்துக்கு பாடிக் கொண்டே இருந்ததால், திமுக உறுப்பினர்கள் கடுப்பாகி விட்டார்கள். கடைசியில் எழுந்து எதிர்ப்பே தெரிவித்து விட்டார்கள். சபாநாயகரிடம், தயவுசெய்து அவரை கோரிக்கையை மட்டும் சொல்ல சொல்லுங்க, பாட வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இதற்கு பிறகுதான் ஆறுக்குட்டி பாடுவதை நிறுத்தினார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட கைகோளபுரம் என்னும் ஊர் திருவிழாவில் அமைச்சர் வேலுமணியுடன் மேளதாளத்துக்கு ஏற்ப டான்ஸ் ஆடினார்.

    லேப்டாப்

    லேப்டாப்

    இப்படி ஆறுக்குட்டி எம்எல்ஏ பாடுவதும், ஆடுவதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று ஆகும். நேற்றுகூட கோவை துடியலூரை அடுத்துள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தார். மொத்தம் 715 பேருக்கு இந்த லேப்டாப் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டன. இதனை ஆறுக்குட்டிதான் மாணவிகளுக்கு வழங்கினார்.

    நல்லா பாடினீங்க

    நல்லா பாடினீங்க

    ஆனால் அதற்கு முன்னதாக, பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் எல்லோரும் சேர்ந்து அதிமுக அரச பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டு பாடினார்கள். இதை ஆறுக்குட்டி கவனித்து ரசித்தார். பிறகு மாணவிகள் முன்னிலையில் பேச வந்தார். அப்போது, "மாணவிகள் பாட்டை நல்லா பாடினீர்கள்.

    நாட்டுப்புற பாட்டு

    நாட்டுப்புற பாட்டு

    ஆனால் அரசின் நலத்திட்டங்கள் ரொம்ப குறைவாக பாட்டில் இருந்ததே.. என்கிட்ட கேட்டிருந்தால் நிறைய எழுதி தந்திருப்பேனே" என்று சொன்னார். அதோடு ஆறுக்குட்டி விடவில்லை, அதிமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவரே பாட ஆரம்பித்து விட்டார். சாதனைகள் அனைத்தும் நாட்டுப்புறப் பாடல் பாணியிலேயே பாடினார்.

    கற்று தருகிறேன்

    கற்று தருகிறேன்

    இறுதியாக, மாணவிகள் யாராவது நாட்டுப்புற பாட்டு கத்துக்க ஆசைப்பட்டால், தான் அவர்களுக்கு அதை சொல்லி தர தயாராக இருப்பதாக ஃபைனல் பஞ்ச் வைத்துவிட்டு போனார் ஆறுகுட்டி!!

    English summary
    MLA Aarukutty gave the laptop to the plus 2 students in Kovai Dist.,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X