கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி வேல் வீர வேல் என்று முழங்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. வெற்றி வேல் வீரவேல் என்று முழங்கிய உடன் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

Google Oneindia Tamil News

கோவை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. வணக்கம் தமிழகம், வணக்கம் கோவை என்று சொன்ன மோடி, வெற்றி வேல் வீர வேல் என்று முழக்கமிட்டார். வளர்ச்சிக்கு எதிரானவர்களை இந்திய மக்கள் ஒதுக்கி வைக்க நினைக்கின்றனர் என்றார். வளர்ச்சியை மையப்படுத்தும் அரசைத்தான் மக்கள் விரும்புகின்றனர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    திமுகவை ஓடவிட்ட மோடி.. கோவையில் பகிரங்க குற்றச்சாட்டு!

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     Modi started his election campaign in Tamil Nadu Chanting as Vetri Vel Veera Vel

    திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் பல கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் இரண்டு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி கோயம்புத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,வணக்கம் தமிழ்நாடு! வணக்கம் கோயம்புத்தூர்! வெற்றி வேல்! வீரவேல்! என தமிழில் பேச்சை தொடங்கினார்.

    ஆகச்சிறந்த சிந்தனையாளர்கள், விடுதலை வீரர்கள், விஞ்ஞானிகள் பிறந்த மண் கொங்கு மண் என்று கோவைக்கு புகழாரம் சூட்டினார். தமிழகம் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது.

    திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி... புகழ்ந்து தள்ளிய ஓ.பி.எஸ்! திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி... புகழ்ந்து தள்ளிய ஓ.பி.எஸ்!

    இந்திய வரலாற்றின் இக்கட்டான காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வளர்ச்சிக்கு எதிரானவர்களை இந்திய மக்கள் ஒதுக்கி வைக்க நினைக்கின்றனர் என்றார். வளர்ச்சியை மையப்படுத்தும் அரசைத்தான் மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

    கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு உதாரணமாக தேசிய ஜனநாயக்கூட்டணி திகழ்கிறது என்று மோடி கூறினார். மத்திய அரசின் திட்டத்தினால் 25 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர் என்றும் மோடி குறிப்பிட்டார்.

    English summary
    Prime Minister Modi has started the Tamil Nadu Assembly election campaign in Coimbatore. Modi said hello Tamil Nadu, hello Coimbatore and chanted "Vetri Vel Vel Veera Vel". He said the Indian people want to set aside those who are against development. "People want a government that focuses on growth," Modi said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X