கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொள்ளை அடித்து விட்டு காரில் ரிட்டர்ன் ஆன மணிகண்டன்.. வளைத்து பிடித்த போலீஸ்!

Google Oneindia Tamil News

கோவை: கொள்ளை அடிச்சிட்டு காரில் திரும்பி கொண்டிருந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காட்பாடி கே.வி. குப்பத்தை சேர்ந்தவர்தான் மணிகண்டன். இவர் "கை" வைக்காத ஊரே இல்லை. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நாமக்கல், தருமபுரி ஊர்களின் பகுதிகளில் மணிகண்டன் பேரை கேட்டாலே சும்மா அலறுகிறார்கள்.

ஏன் என்றால், மிஸ்டர் மணிகண்டன் இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடித்துள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் சென்சுரியே போட்டு விடுவார். இவர் மீது நிறைய ஸ்டேஷன்களில் புகார் இருக்கிறது. 3 முறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார்.

 1 கிலோ நகைகள்

1 கிலோ நகைகள்

ஆனாலும் மணிகண்டன் திருந்திய பாடு காணோம். போன மாசம் கூட காஞ்சிபுரம் பக்கம் ஒரு கொள்ளையில் ஈடுபட்டார். அப்பவும் போலீஸ் பிடிச்சு 1 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் கடந்த நவம்பர் 3ம் தேதி ஜாமீனில் வெளிவந்த மணிகண்டனுக்கு கை நம நமவென்று அரிக்க ஆரம்பித்துவிட்டது.

 தனிப்படை அமைப்பு

தனிப்படை அமைப்பு

வழக்கம்போல் கைவரிசையில் இறங்கிவிட்டார். கொள்ளை அடிப்பதிலும் படு வேகம் மணிகண்டன். நவம்பர் 3-ம்தேதி வெளியே வந்த இவர், நேற்று வரைக்கும் 6 இடங்களில் கொள்ளை அடிச்சிட்டார். 2 கிலோ தங்கத்தை அபேஸ் பண்ணிட்டார். அதனால மணிகண்டனை எப்படியாவது பிடிச்சிடணும்னு நினைச்சு போலீசார் தனிப்படையே அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

 கேரளா தப்ப திட்டம்

கேரளா தப்ப திட்டம்

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் ஒரு வீட்டில் ஆட்டைய போட்டார் மணிகண்டன். அந்த வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் வாரி சுருட்டி கொண்டு மறைந்திருக்க காரில் ஆந்திரா போனார்... பிறகு கோவை வழியாக காரிலேயே கேரளா போகலாம் என பிளான் செய்தார்.

 தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

திண்டுக்கல் வீட்டில் திருடிய பொருட்களை அந்த காரில் தன்னுடனே வைத்து கொண்டார் மணிகண்டன். இப்படி கார் பிடித்து மணிகண்டன் கேரளா தப்புகிறார் என்ற தகவல் போலீசுக்கு தெரிந்துவிட்டது. நள்ளிரவு நேரத்தில் தீவிரமாக கண்காணித்து கொண்டே இருந்தனர்.

 பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

அப்போது காரில் வந்து கொண்டிருந்த மணிகண்டன், சேலம் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் பெட்ரோல் போட்டு கொண்டிருந்தார். அப்போது போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரது காரை பறிமுதல் செய்து, அதில் சோதனையும் செய்தனர்.

 விசாரணை

விசாரணை

அதில், வீடுகள், பீரோ, பெட்டிகளை உடைக்க பயன்படும் இரும்பு ராடுகள், 8 செல்போன்கள், திருடிய வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள், கட்டுக்கட்டாக பணம், வெள்ளி பாத்திரங்கள் என எல்லாவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இப்போது மணிகண்டனிடம் விசாரணை போய் கொண்டிருக்கிறது.

English summary
Near Salem the famous bandit arrested and jewels are confiscated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X