கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தொடர் சோதனை- வீடியோ

    கோவை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    இத்தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர்.

    அலட்சியமாக இலங்கை

    அலட்சியமாக இலங்கை

    இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு ஏஜென்சி எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது. கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாம்

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாம்

    இந்நிலையில் இலங்கைக்கு சென்ற இந்திய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், சஹ்ரான் குழுவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். மேலும் இலங்கையிலும் அந்த குழு விசாரணை நடத்தியது.

    கோவையில் சோதனை

    கோவையில் சோதனை

    இதனைத் தொடர்ந்து இலங்கை தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடனான தொடர்புகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் அன்புநகர் உட்பட 7 இடங்களில் இன்று புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது பகல் 2 மணிவரை நடைபெற்றது.

    4 பயங்கரவாதிகள் கைது

    4 பயங்கரவாதிகள் கைது

    சஹ்ரான் நடத்தி வந்த தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினரும் கோவை சந்தேக நபர்களுக்குமான தொடர்புகளை உறுதி செய்த பின்னர் இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனையின் முடிவில் 4 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தற்போது துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல்

    செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல்

    கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்க், 13 சிடி-டிவிடிகள், 300 ஏர் கன் குண்டுகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    English summary
    Searches being conducted at 7 locations in Coimbator over suspected Terror Links.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X