கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விலகாத மர்மம்.. அவிழுமா மர்ம முடிச்சு! கோவை கார் வெடிப்பு..6 பேரிடம் மீண்டும் என்.ஐ.ஏ விசாரணை!

Google Oneindia Tamil News

கோவை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், 10 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.

கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்பு: கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு! தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்பு: கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு!

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 ஜமேசா முபின்

ஜமேசா முபின்

சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன் காரை ஓட்டி இறந்த ஜமேசா முபின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். "என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இது ஐஎஸ்ஐஎஸ் படையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்" என்று தகவல்கள் வெளியான நிலையில், இது திட்டமிட்ட தாக்குதல் என போலீசார் கூறினர்.

6 பேர் கைது

6 பேர் கைது

அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா ,முகமது அசாருதீன், ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 6 நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், 10 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விசாரணை

விசாரணை

கைது செய்யப்பட்ட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 17ஆம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த ஏழாம் தேதி அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து பெரஸ் கான், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது தவ்பிக் உள்ளிட்ட ஆறு பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆறு நாட்கள் விசாரணை நிறைவடைந்த நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அவர்கள் ஆறு பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆறு பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் 10 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை விசாரணையின் போது பல தகவல்கள் கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் விசாரித்தால் இது தொடர்பாக மேலும் பலர் சிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
It has been reported that the NIA officials are planning to remand the six people arrested in connection with the Coimbatore car blast incident and file a petition in the Poontamalli Special Court seeking permission for 10 days of interrogation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X