அதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் களமிறங்கிய என்ஐஏ அதிகாரிகள்.. தீவிர சோதனை.. ஏன்?
கோயம்புத்தூர்: கோவையில் இன்று அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு மிக தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்தது.
இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல் இந்த தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

என்ன புகார்
கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக கோவையில் முக்கிய இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது.

தேடுதல்
இதனால் கடந்த ஐந்து நாட்களாக கோவையில் இந்திய ராணுவப்படை, என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

யார் இருக்கிறார்கள்
லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு ரகசியமாக நுழைந்துள்ளனர். இவர்கள் தற்போது கோவையில் இருப்பதாக கூறப்படுவதால் இந்த சோதனை நடந்து வருகிறது.

அதிகாலை
இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவையில் இன்று அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு மிக தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள முக்கிய இடங்கள், மால்கள், பேருந்து நிலையங்களில் இதற்காக அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.