கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்!

கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை- வீடியோ

    கோயம்புத்தூர்: கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    கோவையில் இன்று அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புயல்வேக நடவடிக்கை மூலம் அங்கு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடும் சோதனை

    கடும் சோதனை

    இந்த நிலையில் காலை 5 மணியில் இருந்து தொடர்ந்து 4 மணி நேரமாக அங்கு சோதனை நடந்து வருகிறது. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 15 வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் 4 அதிகாரிகள் அல்லது 3 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஐந்து இடங்கள்

    ஐந்து இடங்கள்

    இதில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள 5 பகுதிகளை குறி வைத்துள்ளனர். அவிநாசி பகுதிகளில் முக்கியமாக அதிகமாக சோதனை நடந்து வருகிறது. அதேபோல் உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகரில் சோதனை நடக்கிறது. சேலம் அருகே இருக்கும் கோவை கிராமங்களில் சோதனை அதிகமாக நடைபெற்று வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    சோதனை

    சோதனை

    மேலும் கோவையை சேர்ந்த ஜாபர் அலி, சலீம் உள்ளிட்ட சிலர் வீடுகளில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. பொதுவாக சோதனை நடந்து முடிந்த பின் அங்கிருந்து அதிகாரிகள் வெளியேறுவது வழக்கம். ஆனால் இவர்களின் வீடுகளில் சோதனை நடந்து முடிந்தாலும் கூட அதிகாரிகள் இன்னும் அங்கிருந்து வெளியேறவில்லை.

    என்ன கடுமை

    என்ன கடுமை

    சோதனை செய்யப்பட்ட வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் முக்கிய ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    English summary
    NIA seized cell phone, laptop, and pen drives from many houses in Coimbatore after early morning search.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X