கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி... புகழ்ந்து தள்ளிய ஓ.பி.எஸ்!

Google Oneindia Tamil News

கோவை: எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழில் புலமை வாய்ந்தவர் போல் மோடி தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது என்றும் அவர் கூறினார்.

O. Panneer Selvam said that Prime Minister Modi is the treasure trove of innumerable projects

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் வந்தார். இன்று காலையில் புதுவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதன்பிறகு பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர் காங்கிரஸ் கட்சியையும், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் விளாசித் தள்ளினார்.

இதனை தொடர்ந்து மாலையில் கோவை கொடிசியா அரங்கில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விழா மேடையில் அதிமுக-பாஜக பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமரை வரேவேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றியபோது பேசியதாவது:-

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...கோவையில் மோடி சொன்ன திருக்குறளின் அர்த்தம் இதுதான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...கோவையில் மோடி சொன்ன திருக்குறளின் அர்த்தம் இதுதான்

எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். புதுமை செயல்வடிவம், தமிழர் மீது தனி அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. பிரதமர் அவ்வையார் செய்யுளையும், திருக்குறளையும் கடந்த முறை தமிழகம் வந்தபோது சுட்டி காட்டி பேசினார். தமிழில் புலமை வாய்ந்தவர் போல் மோடி தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோவை வந்துள்ள மோடிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

English summary
Deputy Chief Minister O. Panneer Selvam said that Prime Minister Modi is the treasure trove of innumerable projects
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X