கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் மேலும் ஒரு யானை பலி.. 3 நாட்களாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் கடந்த 3 நாட்களாக வனத்துறையினரால் சிகிச்சை பெற்று வந்த யானை சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டது.

Recommended Video

    கோவையில் மேலும் ஒரு யானை பலி.. 3 நாட்களாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை!

    போட்ஸ்வானா நாட்டில் 300-க்கும் மேற்பட்ட யானை பலியாகிவிட்டது. இதற்கான காரணங்கள் தெரியவில்லை. எனினும் அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

     One more elephant in Coimbatore died of illness

    இந்த நிலையில் யானைகளின் தந்தங்கள் அப்படியே இருப்பதால் அவை வேட்டையாடப்படவில்லை என்று உறுதியானது. இதையடுத்து விசாரணையில் அவை குடித்த தண்ணீரில் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் இதுவும் உறுதியாகவில்லை.

    அது போல் கோவையிலும் அவ்வப்போது யானைகள் காரணம் ஏதும் இன்றி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சாடிவயல் அருகே சர்க்கார்போர்த்தி பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க யானை உடல்நலக் குறைவால் சிக்கி தவித்தது.

    இதனால் உணவருந்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த 3 தினங்களாக சிகிச்சை அளித்து வந்தனர். அந்த யானை சுருண்டு சுருண்டு படுப்பதால் அதற்கு வயிற்று வலியாக இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி.. கிராச்சுட்டி பெறுவதற்கு வரம்பை நீக்க அரசு பரிசீலனை? மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி.. கிராச்சுட்டி பெறுவதற்கு வரம்பை நீக்க அரசு பரிசீலனை?

    இதையடுத்து அந்த யானைக்கு குளுகோஸ் செலுத்தப்பட்டது. வயிற்றுவலிக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எனினும் அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. கோவையில் 8 மாதங்களில் 17 யானைகள் பலியாகிவிட்டன. இது போல் அடுத்தடுத்து யானைகள் பலியாவதால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    One more elephant died in Coimbatore despite it gets treatment for its illness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X