கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேட்டுப்பாளையம் சுவர் விபத்து: தலித்துகளால் அதிகாரம் பெற்றவர்கள் நீதி கேட்பீர்களா? பா.ரஞ்சித் ஆவேசம்

Google Oneindia Tamil News

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கோபம் வெளிப்படுத்தியுள்ளார். ஜாதி உணர்வால் கட்டப்பட்ட சுவர் அது என்று கூறும் ரஞ்சித், தனது வரிசையான ட்வீட்டுகளில் இந்த நிகழ்வு குறித்து கடுமையாக விளாசியுள்ளார்.

Pa.Ranjith shows anger over Mettupalayam, building collapse issue

கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல். #மனிதமற்ற_மனிதர்கள்

தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

போராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று விட்டார்கள். சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும்.அவ்வளவு தான்...அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம்!!!

அதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்.

நீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது.

English summary
Pa.Ranjith shows anger over Mettupalayam, building collapse issue, many tweets he given.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X