கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அரசியலுக்கு வருவேன்.. வந்தேன்னா இது நடக்கும்.. பார்த்திபன் பீடிகை!

Google Oneindia Tamil News

கோவை: நான் அரசியலுக்கு வருவேன் என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நானும் அரசியலுக்கு வருவேன்: ரஜினி, கமலை கலாய்த்த பார்த்திபன்!

    கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சினிமாவில் சாதித்தவுடன் அரசியலுக்கு வருவேன். நான் அரசியலுக்கு வரும் போது புரட்சியுடன் வருவேன்.

    Parthiban says that he will come to politics soon

    நான் அரசியலுக்கு வருவது எப்போது என்பதை காலம்தான் கூறும். நான் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு அரசு போதிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என பார்த்திபன் தெரிவித்தார்.

    நடிகர் பெரும்பாலானோர் அரசியலுக்கு வருவதற்கு விரும்புகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனிக் கட்சியையும் தொடங்கிவிட்டார். அந்த கட்சி தற்போது 3ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    மலிவான அரசியல் செய்கிரார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்!மலிவான அரசியல் செய்கிரார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்!

    அது போல் ரஜினிகாந்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ஆனால் இது வரை அவர் வரவில்லை. இந்த ஆண்டு சித்திரை மாதம் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலில் தனிக்கட்சி தொடங்கி அந்தளவுக்கு சோபிக்காத டி ராஜேந்தர், தனது மகன் சிம்புவை களமிறக்க முயற்சிக்கிறார். அது போல் விஜய்யையும் அரசியலுக்கு வர அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். ஆனால் அவரும் இன்னும் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார்கள். இப்போது இந்த வரிசையில் பார்த்திபன் வந்துள்ளார். அவராவது குறித்த நேரத்தில் வருவாரா என்பதை பார்ப்போம்.

    English summary
    Actor Cum Director Parthiban says that he will come to politics soon after he achieved in Tamil Cinema.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X