கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரான்ஸ்பார்மர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில் - தேசியக்கொடி போர்த்தி மரியாதை

கோவை சிங்காநல்லூரில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Google Oneindia Tamil News

கோவை: கோவை சிங்கநால்லூரில் மின்சார டிரான்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு காவல்துறையினர் தேசியக்கொடி போர்த்தி மரியாதையுடன் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். அந்த மயில் வனத்தில் புதைக்கப்பட்டது.

கோவை திருச்சி ரோட்டில் உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதிக்கு திடீரென ஒரு மயில் வந்தது. அந்த மயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அமர்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அந்த மயில் உடல் கருகி உயிரிழந்தது. மயிலின் உடல் டிரான்பார்மரிலேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

Peacock dies due to electrocution in Coimbatore

சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார், ஏட்டு சுகுமார் மின்வாரிய ஊழியர்களுடன் வந்து மயிலின் உடலை மீட்டனர்.

3 வயதான பெண் மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். மயில் தேசியப்பறவை என்பதால் தேசியக்கொடி போர்த்தி உரிய மரியாதையுடன் வனத்துறை அதிகரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த மயில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

வயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி வயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

English summary
A peacock was electrocuted after coming in contact with a transformer at Singanallur near Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X