கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார்.. என் மூளையை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க" கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு

மூளையை காணவில்லை என கோவை போலீசில் விசித்திர புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வித்தியாசமான புகாருடன் கமிஷனர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு- வீடியோ

    கோவை: "சார்.. என் மூளையை காணோம்" என்று புகார் அளிக்க வந்தவரை கண்டு கோவை போலீசார் ஷாக் ஆகி நின்றுவிட்டனர்.

    கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும். நேற்றும்கூட பிஸியாக இருந்த நேரத்தில் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அவருக்கு 55 வயதிருக்கும்.

    பிரதான அலுவலகம் வழியாக உள்ளே சென்றவர், அங்குள்ள வரவேற்பாளரிடம் கையில் இருந்த மனுவை கொடுத்தார். போலீசாரும் அவரிடம் என்ன புகார், எது சம்பந்தமானது என்று விசாரித்தனர்.

     கமிஷனர் எங்கே

    கமிஷனர் எங்கே

    அதற்கு அவர், "சார்.. அதை உங்ககிட்ட எல்லாம் சொல்ல முடியாது. ஸ்டிரைட்டா கமிஷனர் கிட்டதான் நான் இது சம்பந்தமா பேசணும்" என்று சொல்லிக் கொண்டே கமிஷனர் ரூமை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார்.

     ரொம்ப கஷ்டப்படறேன்

    ரொம்ப கஷ்டப்படறேன்

    விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரமாக்கினர். அப்போது அந்நபர், "சார்.. என் மூளையை காணோம், யாரோ என்னை ஏமாத்தி மூளையையும் திருடிட்டாங்க. மூளை இல்லாம நான் ரொம்ப கஷ்டப்படறேன்.

    அதிர்ந்தனர்

    அதிர்ந்தனர்

    என் மூளையை வெச்சி யாரோ ஏதோ சதி செய்றாங்க, அதனால்தான் என்னால இப்போ எதுவும் யோசிக்க முடியல. கமிஷனரை பார்த்து கம்பிளைன்ட் தர போறேன்" என்றார். இதைக்கேட்டதும் அதிர்ந்து நின்ற போலீசார், அவர் பாக்கெட்டில் இருந்த பேப்பர்கள், ஆவணங்களை சோதனை செய்து பார்த்தனர்.

     மனநலம் பாதிப்பு

    மனநலம் பாதிப்பு

    அந்தநபர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து அந்நபரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    English summary
    A man has complained to the Kovai Commissioner Office that his brain was being stolen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X