கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச் சுவர்.. பொதுமக்கள் மறியல்.. ஆட்சியர், எம்எல்ஏ முற்றுகை

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி

    கோவை: கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகள் விழுந்து 17 பேர் பலியான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். இந்த விபத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ சின்னராஜை முற்றுகையிட்டனர்.

    மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.

    இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

    People involved in road roko in Mettupalayam where 17 died after compund wall collapsed

    பலியானோரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மழைக் காலம் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது அதிகாரிகள் அக்கறை கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டிய பொதுமக்களும் உறவினர்களும் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    2015-க்கு பிறகு சென்னை ஏரிகள்.. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்2015-க்கு பிறகு சென்னை ஏரிகள்.. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்

    இவர்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்துநடந்த இடத்தை பார்வையிட வந்த ஆட்சியர் மற்றும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டனர்.

    People involved in road roko in Mettupalayam where 17 died after compund wall collapsed

    மேலும் இந்த சுற்றுச்சுவரை எழுப்பிய உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழும் கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் மருத்துவமனையை சுற்றியும் மறியல் நடைபெறுகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    Thousands of people gathered in Mettupalayam- Ooty NH protest against government machineries for not taking action as precautionary measure.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X