கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென இறந்த சாமியார்.. உட்கார்ந்த நிலையில் தூக்கி வந்த சிஷ்யர்கள்.. அடக்கம் செய்ய எதிர்த்த கிராமம்

Google Oneindia Tamil News

கோவை: வெளியூரில் இறந்த சாமியாரின் உடலை தங்கள் ஊரில் அடக்கம் செய்ய கோவை அருகே உள்ள கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    திடீரென இறந்த சாமியார்.. அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கோவை கிராம மக்கள்

    கோவை மாவட்டம் நரசீபுரம் அருகே உள்ள ஆத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காட்டுப் பகுதியில் விஸ்வாமித்திரர் ஆலயம் என்னும் அம்மன் சிலையுடன் 108 சிலைகள் கொண்ட கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் போன்ற நாட்களில் கோவிலுக்கு வழிபட மக்கள் வந்து செல்வது வழக்கம். இதனிடையே நேற்று சுமார் மாலை 5 மணியளவில் ஒரு காரில் அமர்ந்த நிலையில் இறந்தவர் சடலத்தை அந்த கோவிலுக்கு கொண்டு செல்வதை அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த ஒருவர் பார்த்து ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    தென்மேற்குப் பருவமழை கொட்டுது - குடிநீருக்கு பிரச்சினையில்லை.. கோவைவாசிகள் குஷிதென்மேற்குப் பருவமழை கொட்டுது - குடிநீருக்கு பிரச்சினையில்லை.. கோவைவாசிகள் குஷி

    கோயில் வளாகம்

    கோயில் வளாகம்

    மேலும் இறந்தவர் உடலை அந்த கோவில் வளாகத்தில் குழி தோண்டி ஜீவ சமாதி செய்ய ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடந்து வந்து உள்ளது. கொரானா நேரத்தில் வேறு ஒரு ஊரில் இறந்தவர் உடலை ஊர்காரர்கள் அனுமதி இன்றி யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்ததை அறிந்த ஊர்மக்கள் ஒன்று திரண்டனர்.

    போலீஸார்

    போலீஸார்

    விஷயம் அறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் அக்கோவிலின் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் 3- வது வீதியில் வசித்து வந்த ஆண்டுரு ஜீ சுவாமிகள் என்று தெரிய வந்தது.

    சீடர்கள்

    சீடர்கள்

    அவர் நீண்ட நாட்களாக திருவண்ணாமலையில் தெய்வ வழிப்பாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது இங்கு கோவை காந்திபுரத்தில் சில ஆண்டுகள் வசித்து வந்த நிலையில் சர்க்கரை நோய் காரணமாக நேற்று காலை 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக விசாரணையில் கூறப்படுகிறது. அவருடன் இருந்த சீடர்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து அவர் கூறிய இடத்தில் ஜீவ சமாதி செய்ய கொண்டு வந்ததாக கூறினர்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    கொரானா‌ நோய் தொற்று காராணமாக காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல வீதிகிளில் சீல் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறந்தவர் உடலுக்கு கொரானா பரிசோதனை செய்தார்களா? என்று தெரியவில்லை, அதே போல உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வராமல் காரில் கொண்டு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

    புறம்போக்கு இடம்

    புறம்போக்கு இடம்

    கோவில் அமைந்து உள்ள இடம் புறம்போக்கு இடம் என்று கூறி எங்கள் ஊரில் உடலை அடக்கம் செய்ய வேண்டாம் என்று ஆத்தூர் ஊர் பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து நின்றனர். போலீசார் இறந்தவரின் சம்மந்தப்பட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மீண்டும் காந்திபுரம் பகுதிக்கு எடுத்து சொல்வதாக கூறியதை தொடர்ந்த இரவு 8 மணியளவில் அந்த உடல் அதே காரில் மீண்டும் வெளியில் கொண்டு வரப்பட்டு காந்திபுரம் பகுதியை நோக்கி எடுத்து செல்லப்பட்டது. இதனால் நரசீபுரம் உள்ளிட்ட ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    people in a village near Coimbatore objects for doing last rites for the godman who died in another place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X