கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. குறட்டை விட்டு ஹாயாக தூங்கிய குடிகாரரால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. தூங்கிய குடிகாரரால் பரபரப்பு!- வீடியோ

    கோவை: கோவை ஏடிஎம்கள் பலவற்றிலும் பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    திருவிழாக் காலங்களில் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு வங்கிகள் சரியான காரணத்தை ஒரு போதும் சொல்வதில்லை.

    People stranded in Coimbatore as ATMs not working

    நேற்று சென்னை வந்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு கூட இதைக் குறிப்பிட்டுப் பேசினார். ஏடிஎம்களில் பணம் இருக்கா என்று அவர் செய்தியாளர்களிடம் கேட்டார். இந்த நிலையில் கோவையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை.

    People stranded in Coimbatore as ATMs not working

    இதுகுறித்து வங்கிகள் தரப்பில் கேட்டால் சர்வர் டவுன் என்று பதில் வருகிறதாம். இதுகுறித்து பணம் எடுக்க வந்து ஏமாந்த ஒருவர் கூறுகையில் எங்குமே பணம் கிடைக்கவில்லை. பணம் இல்லாமல் என்ன செய்வது. இங்க பாருங்க, குடிகாரன் உள்ளே படுத்திருக்கான். இப்படி இருந்தால் எப்படி என்று புலம்பினார்.

    People stranded in Coimbatore as ATMs not working

    அவர் சுட்டிக் காட்டிய ஏடிஎம் மையத்திற்குள் ஒரு குடிகாரர் ஜாலியாக வாசலை அடைத்துக் கொண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். கோவை முழுவதும்தான் இப்படி என்று இல்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் கூட பல இடங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது நினைவிருக்கலாம்.

    [தங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு!]

    நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏடிஎம்களில் பணம் போட்டு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

    English summary
    People are stranded in Coimbatore as hundreds of ATMs are not working in the City.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X