கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரியார் மீது காவி பூசிய அருண் கிருஷ்ணன் தே.பா சட்டத்தில் கைது - மத்திய சிறையில் அடைப்பு

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாக கைது செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: பெரியார் சிலை மீது காவி பூசி அவமதித்ததாக கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

Recommended Video

    பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு.. தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

    கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Periyar statue issue: Arun krishna arrested under NSA act

    கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார்

    சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார்

    சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தார்.

    சரணடைந்தவர் அருண் கிருஷ்ணன், பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அவர் மீது குனியமுத்தூர் காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து கருப்பர் கூட்டம் வீடியோ பதிவிட்டதால் முருக பக்தராகிய தான் மனதளவில் புண்பட்டதாகவும், இதனையடுத்தே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாகவும் அருண் கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

    அரண்மனை போல வீடு.. 38 ஏசி, 10 பிரிட்ஜ் + 8376 புத்தகங்கள்..ஜெ. இல்லத்தில் இருப்பது என்ன? முழு விவரம்அரண்மனை போல வீடு.. 38 ஏசி, 10 பிரிட்ஜ் + 8376 புத்தகங்கள்..ஜெ. இல்லத்தில் இருப்பது என்ன? முழு விவரம்

    இந்த நிலையில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதனையடுத்து அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான ஆணையை நேற்று மாலை சிறைத்துறை நிர்வாகத்திடம் வழங்கினர்.

    கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டம் செந்தில் வாசன், சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், பெரியாரை அவமதித்த அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bharat sena worker Arun Krishna arrest under National Security Act in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X