கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு

Google Oneindia Tamil News

கோவை: காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன. என இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கோவை சிங்காநல்லூரில் இன்று கொண்டாட்டம் நடந்தது. இதில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கான பரிசுகள் வழங்கும் விழாவும் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கி மாணவர்கள் மத்தியில் பேசினர்.

6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா!6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா!

 உலக நாடுகள் பயப்படுகின்றன

உலக நாடுகள் பயப்படுகின்றன

அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நம்முடைய அணுகுமுறை, நடை, உடை, பாவனை, பேச்சு இதெல்லாம் தான் நம்மை ஹீரோவாக மாற்றுகிறது. இன்று இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தத் தலைவர்களுடைய பட்டிலை எடுத்து பார்த்தோம்ணா, . காமராசருக்குப் பிறகு, இன்றுதான் இந்தியாவுக்கு ஒரு தலைவர் (மோடி) கிடைச்சிருக்காரு. உலக நாடுகள் எல்லாம் இப்ப இந்தியாவின் பெயரை பயந்து உச்சரிக்கின்றன.

டிரம்ப் குழந்தை மாதிரிகேட்குறாரு

டிரம்ப் குழந்தை மாதிரிகேட்குறாரு

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்ற போது, வல்லசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஒரு குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறாரு. எல்லாருக்கும் பயம் வந்திடுச்சு, இப்ப எந்த விஷயத்திலும் இந்தியாவை அசைச்சுக்க முடியாது.

குழந்தைகள் சொன்னாங்க

குழந்தைகள் சொன்னாங்க

மாணவர்களிடம் இருந்துதான் சீர்திருத்தங்கள் நடக்கணும். அவர்களால்தான் இந்தியாவை மாற்றியமைக்க முடியும். நம்முடைய விஞ்ஞான வளர்ச்சியும் மோடியின் அறிவுப் புகழும் எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்குத் தெரியப்படுத்துனாங்க..

தமிழ்நாட்டில் மாற்றம்

தமிழ்நாட்டில் மாற்றம்

நீங்களும் உங்களின் பெற்றோரிடம் சென்று, மோடியை பற்றி பேசுங்க. இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று அவங்க கிட்ட தெரியப்படுத்துங்க . தமிழ்நாட்டில் இப்போது மாற்றம் வரவில்லையெனில், எந்த ஜென்மத்திலும் வராது'' இவ்வாறு கூறினார்.

ஞானவேல் ராஜா பேச்சு

ஞானவேல் ராஜா பேச்சு

இதே விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில் "மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பது போல் தெரியவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு கிடையாது. நாட்டில் பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம்; ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியும் என ஒரு கும்பல் தவறாக பிரச்சாரம் செய்யுறாங்க. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை; அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மொழி மாற்றம் செய்ய உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்" இவ்வாறு கூறினார்.

English summary
director kasthuri raja said, pm modi good leader in india after kamarajar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X