கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடரும் சாதனைகள்.. பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற.. கோவை ரத்தினம் க்ரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 நிகழ்வில் பிரதமர் மோடி கோவையில் இருக்கும் ரத்தினம் க்ரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்வி நிறுவனத்தை பாராட்டி பேசினார்.

கடந்த வாரம் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 நிகழ்வின் இறுதிச் சுற்றை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். நாடு முழுக்க பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கல்லூரிகளை , அதன் மாணவர்களை பாராட்டினார்.

PM Modi praises the students from Rathinam group of institutions

கோவையில் இருக்கும் ரத்தினம் கல்லூரியை சேர்ந்த ஆறு மாணவர்களைக் கொண்ட குழு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் - 2020 இல் முதல் பரிசை வென்றுள்ளது. அவர்கள் "சாலை புகைப்படத்தின் அடிப்படையில் நடைபாதை நிலை- தானியங்கி மதிப்பீடு" என்ற திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இவர்களை பிரதமர் மோடி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 நிகழ்வில் பாராட்டி பேசினார். அதோடு இந்த கல்லூரி மாணவிக்கு தமிழில் வணக்கம் வைத்து தனது உரையாடலை மோடி தொடங்கினர். இந்த நிகழ்வு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இதுமட்டுமின்றி இந்த கல்வி நிறுவனம் மேலும் பல சாதனைகளை செய்துள்ளது. கோவையில் இருக்கும் ரத்தினம் க்ரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் சிறந்த தொழில் சார்ந்த பாடத்திட்டத்தைக் கொண்ட கல்வி வளாகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சிறந்த கம்பெனிகளுடன் இணைந்து கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

PM Modi praises the students from Rathinam group of institutions

• ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் எஸ்பிஐ எக்விப்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்)
• மெஷின் லேர்னிங் & பிளாக்செயின் டெக்னாலஜி (ஐபிஎம் மற்றும் அகஸ்டா சிஸ்டம்ஸ்)
• நெட்வொர்க் மற்றும் சைபர் பாதுகாப்பு (சிஸ்கோ சிஸ்டம்ஸ் மற்றும் சாக்கோ)
• நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்பிட் ஷிப்ட்டர்ஸ்) ஆகிய 4 சிறந்த துறை சிறப்பியல் பயிற்சி மையங்கள் உள்ளன.

கடந்த மாதம் சிறந்த டிங்கரிங் ஆய்வகம் உள்ள வளாகமாக ரத்தினம் வளாகத்தினை நிதி ஆயோக் தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

PM Modi praises the students from Rathinam group of institutions

மேலும் அடல் ஆய்வகம் மூலமாக
• 3 டி அச்சிடப்பட்ட முகம் கவசம்
• அவசர வென்டிலேட்டர்
• டச்லெஸ் சானிட்டைசர் டிஸ்பென்சர்
• யு.வி-சி அடிப்படையிலான சுத்திகரிப்பு பொருட்கள் ஆகிய புதிய படைப்புகளை கண்டுபிடித்து உள்ளனர் .
.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கையில், நாட்டின் சிறந்த 150 நிறுவனங்களில் பட்டியலில் தொடர்ச்சியாக நான்கு முறை, ரத்தினம் கல்லூரி இடம் பிடித்துள்ளது. 3000க்கும் மேற்பட்ட ஐடி தொழில் வல்லுநர்கள், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட சிறந்த கல்லூரி வளாகமாக எங்கள் வளாகம் திகழ்கிறது.

அனைத்து சிறப்புகளும் இணைந்து தற்போது மிகச்சிறந்த தருணத்தை உருவாக்கியுள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ரத்தினம் குழு, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் (சாஃப்ட்வேர் எடிஷன்) முதல் பரிசை வென்றுள்ளது. எங்கள் திறன்களை நிரூபிக்க மேடையை தந்த எங்கள் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
PM Modi praises the students from Rathinam group of institutions from Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X