கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை.. 16 பேர் கைது.. 311 சவரன் நகைகள் மீட்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை.. 16 பேர் கைது-வீடியோ

    கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் 311 சவரன் (2488 கிராம்) நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இதுவரை 2488 கிராம் தங்கம் மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

    கடந்த 7 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் தொழிற்சாலையிலிருந்து கோவை 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு தமிழக-கேரள எல்லையான கோவை க.க.சாவடி அருகே கொண்டு வரப்பட்ட 2488 கிராம் தங்க நகைகள், 251கிராம் வைர நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகள் என ரூ.1 கோடிக்கும் மேலான மதிப்பிலானவை பட்டப்பகலில் கொள்ளை அடிக்கப்பட்டது.

    Police arrested 16 accused in Kalyan Jewellers robbery

    கேரள மாநிலம் திருச்சூரில் செயல்படும் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரெனூப், கணக்கில் வராத நகைகள், பணம் தமிழக-கேரள எல்லையில் கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோசிடம் சொல்ல, சிறையில் செம்மரக்கடத்தலில் கைதானவர்கள் மூலம் கொள்ளை அடிக்க பைரோஸ் திட்டமிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரெனூப் மற்றும் கண்ணன், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஹபீப், பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த விபின் சங்கீத், இடுக்கியை சேர்ந்த ரின்சாத் சிதிக் ஆகிய 5 பேரும், கொள்ளையில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன், பைரோஸ், அத்திக் பாஷா, ராஜசேகரன், ரிஸ்வான் செரிப் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை மறைத்து வைத்ததற்கு உதவியதாக பெங்களூரை சேர்ந்த மெகபூபாஷா, சாதிக்உசேன், சையது நயீம், அப்துல் ரஹீம் மற்றும் கொள்ளையில் மூளையாகவும், முக்கிய குற்றவாளியான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் ஆகிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு பிப்ரவரி 4-ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதி பாண்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English summary
    Police arrested 16 accused who are in connection with robbery in Kalyan Jewellers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X