கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்தூட் நிறுவனத்தில் 814 பவுன் கொள்ளை.. பெண் ஊழியர்களே நடத்திய கபட நாடகம்.. கள்ளக்காதலன் கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற விவகாரத்தில் அங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கள்ளக்காதலனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கிருந்த இரு பெண் ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

இலங்கை தாக்குதல் முக்கிய குற்றவாளி செல்போனுக்கு தமிழகத்திலிருந்து சென்ற அழைப்புகள்.. பகீர் பின்னணி இலங்கை தாக்குதல் முக்கிய குற்றவாளி செல்போனுக்கு தமிழகத்திலிருந்து சென்ற அழைப்புகள்.. பகீர் பின்னணி

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

பின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 814 சவரன் நகைகளையும் ரூ 1 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொள்ளை சம்பவம்

கொள்ளை சம்பவம்

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். பின்னர் பெண் ஊழியர்கள் சொன்னது போல் அவர்களை தாக்கி மிரட்டி கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணை

விசாரணை

இந்த கொள்ளையை தனிநபரான அவர் மட்டும் செய்தாரா இல்லை அவரது கூட்டாளிகள் யாரேனும் கீழே நின்று கொண்டிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.

பெண் ஊழியர்

பெண் ஊழியர்

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதில் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களே இது போன்ற கொள்ளை நாடகத்தை நடத்தியது அம்பலமாகியுள்ளது. அந்த இரு பெண்களில் ரேணுகாதேவியின் கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பக்கா பிளான்

பக்கா பிளான்

இரு பெண்களும் கடந்த ஒரு மாதமாக நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இளைஞரை பாலக்காட்டில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Special Investigation Team arrested a youth in connection with looting 814 sovereigns of gold in Coimbatore Muthoot Finance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X