கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு.. புகைப்படம் இல்லாததால் மாணவர் வெளியேற்றம்.. ரூ. 40 கொடுத்து உதவிய போலீஸ் காவலர்

Google Oneindia Tamil News

கோவை: நீட் தேர்வு எழுத சென்ற மாணவன் புகைப்படம் இல்லாததால் வெளியேற்றப்பட்ட நிலையில் புகைப்படம் எடுக்க அவருக்கு ரூ 40 கொடுத்து உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத சென்ற மாணவர்களை தீவிரவாதிகளை போல் சோதனை செய்த பிறகே அவர்கள் தேர்வு கூடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Police constable helped a Neet student who sent out for not taking photograph

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 711 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் கோவையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் சரவணக்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார்.

நீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! நீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

அப்போது தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவரிடம் புகைப்படம் இல்லாததால் அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அந்த மாணவருக்கு 40 ரூபாயை கொடுத்து புகைப்படம் எடுக்க சரவணக்குமார் உதவினார்.

அத்துடன் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்தார். உரிய நேரத்தில் மாணவருக்கு உதவி செய்த காவலரை அங்கிருந்தோர் பாராட்டினர்.

English summary
Police constable helped Neet student who has sent out for not having photograph. PC also arranged the student to attend the exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X