கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி கொடூரம்.... ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை... மேலும் ஒரு வழக்குப்பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசுக்கு போக்கு காட்டி வந்த மணிவண்ணன் போலீசில் சரண்

    கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதான 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, பாலியல் தொந்தரவு செய்ததுடன், பணம் பறித்ததாக, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் , வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது.

    Pollachi case, A further case under the Sexual Assault Section

    அதே நேரம், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சிபிசிஐடி போலீசாரிடம் மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியவரை தீவிரமாக தேடும் போலீஸ்சென்னையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியவரை தீவிரமாக தேடும் போலீஸ்

    மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள் உடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார், மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    English summary
    Pollachi's case, A further case under the Sexual Assault Section; The way to impose life sentences
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X