• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

புதருக்குள் ஷாக்.. விறகு எடுக்க போன வனத்தாய்.. விரட்டி விரட்டியே கொன்ற படுபயங்கரம்..!

|

கோவை: புதருக்குள்ளேயே நீண்ட நேரமாக மறைந்து கொண்டிருந்தது காட்டு யானை.. அப்போதுதான் இப்படி ஒரு கொடூரம் ஆனைமலையில் நடந்துள்ளது..!

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனசரகம், டாப்சிலிப் வனப்பகுதி.. இங்கு எருமைபாறை, பூமாட்டி, வரகளியாறு என நிறைய மலைவாழ் கிராமங்கள் உள்ளன... கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.

இதில் பூமாட்டி பகுதியை சேர்ந்தவர்தான் பரமன்... இவரது மனைவி வனத்தாய்.. 55 வயதாகிறது.. பரமன் சில வருஷங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. இதனால் குடும்பத்தை வனத்தாய் மட்டுமே சுமந்து வந்தார்.. பிள்ளைகளையும் காப்பாற்றி வந்தார்.

டெல்லிக்கு பறந்த டெல்லிக்கு பறந்த "ரிப்போர்ட்".. "அவர்" மீது வருத்தமா?.. பரபரக்கும் வதந்தி.. என்ன நடக்கிறது பாஜகவில்?

விறகு

விறகு

இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு விறகுகள் சேகரிக்க, பூமாட்டி பகுதியில் இருந்து வரகளியாறு காட்டுப்பகுதிக்கு வனத்தாய் சென்றார்... அங்கு விறகு சேகரித்து கொண்டிருந்தார்... அப்போதுதான் அங்கிருந்த ஒரு புதரில் ஒரு யானை நீண்ட நேரம் மறைந்துள்ளது.. புதரில் இருந்ததால், அந்த யானை நிற்பது வனத்தாய்க்கு தெரியவில்லை.. பிறகுதான் திடீரென அவரை விரட்ட ஆரம்பித்தது.. இதை பார்த்து பயந்துபோன வனத்தாய் யானையிடம் தப்பித்து ஓட முயற்சித்தார்.

 மண்டை உடைந்தது

மண்டை உடைந்தது

ஆனால் எவ்வளவு வேகமாக ஓடியும், யானை ஆக்ரோஷமாக விரட்டி கொண்டே வந்தது.. பிறகு அவரை துதிக்கையால் ஒரே சுருட்டாக தூக்கி கீழே போட்டது.. இதில் வனத்தாய்க்கு மண்டை பலமாக உடைந்தது.. அடுத்த செகண்டே, தன்னுடைய காலால் வனத்தாயை மிதித்து கொன்றது அந்த யானை.. இதில் வனத்தாய் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 வனத்துறை

வனத்துறை

இதனிடையே, விறகு எடுக்க போன, அம்மா வீட்டுக்கு திரும்பாததால், சந்தேகம் அடைந்த பிள்ளைகள் காட்டிற்கு சென்று தேடினர்... அப்போதுதான் நிலைகுலைந்த சடலத்தை கண்டு கதறி கதறி அழுதனர்.. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.. அவர்கள் விரைந்து வந்து, வனத்தாயின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 யானை

யானை

இதற்கிடையே வனத்தாயின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியும் வழங்கப்பட்டது. இதில் இன்னொரு சிக்கலும் எழுந்தது.. யானை மிதித்த சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் போக்குவரத்து வாகன வசதி இல்லாததால் உடலை மீட்டு கொண்டு வருவதில் நிறைய சிரமங்கள் ஏற்பட்டது. அதனால், வன கிராமங்களுக்கு தார்சாலை வசதி மற்றும் வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..

அச்சம்

அச்சம்

அதேபோல, இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... தங்கள் குடியிருப்பு சேர்ந்த பெண் ஒருவர் பலியான சம்பவத்தால் மலைவாழ் பெரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

English summary
Pollachi Near Wild Elephant killed Woman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X