கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி.. திருநாவுக்கரசுக்காக களமிறங்கிய தாய் லதா.. இங்கதான் இருக்குது பிரச்சினை!

Google Oneindia Tamil News

Recommended Video

    கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா-வீடியோ

    கோவை: தனது மகன் தவறு செய்யவில்லை என்று பொள்ளாச்சியை உலுக்கிய பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் தாய், லதா நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்களுடன், வாக்குவாதம் செய்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.

    பொள்ளாச்சி பலாத்கார வழக்கில், திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதுமே, சமூகவலைத்தளங்களில் முதலில் பரவிய கருத்து, இந்த விஷயத்தால் அவர்களைப் பெற்றவர்கள் எவ்வளவு வலியால் துடிப்பார்கள் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் நிஜத்தில் நடப்பது வேறு.

    ஃபேஸ்புக்கில் திருநாவுக்கரசு, இவ்வளவு ஆக்டிவாக இருந்தும், இத்தனை பேர் குற்றம்சாட்டியும் எனது மகன் தவறு செய்யவில்லை என்று திருநாவுக்கரசு தாய் வாக்குவாதம் நடத்தியுள்ளார்.

    யார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா யார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா

    முரட்டுத்தன பாசம் தேவையா

    முரட்டுத்தன பாசம் தேவையா

    அவரிடம் பொதுமக்கள் வாய் தகராறு செய்து திட்டி அனுப்பி வைத்தனர். உங்கள் மகனால் பொள்ளாச்சியில் உள்ள அத்தனை பேரும் நாண்டுகிட்டதான் செய்யனும் என்று ஒருவர் கூறிய வார்த்தை லதாவின் காதுகளுக்குள் விழுந்ததாகவே தெரியவில்லை. இந்த முரட்டுத்தனமான பாசம்தான், பிள்ளைகளுக்கு கடிவாளம் இல்லாமல் வளரச்செய்து விடுகிறதோ என்ற எண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

    நுகர்வு கலாச்சார அடிமைகளான பெற்றோர்

    நுகர்வு கலாச்சார அடிமைகளான பெற்றோர்

    பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் என்று வழிவழியாக வந்த பிள்ளை வளர்ப்பு முறை மாறி, சர்வதேச நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி ஆடம்பரமாக வாழ வைப்பதும், கண்டிக்காமலும் பிள்ளைகளை வளர்ப்பதும்தான் நல்ல வளர்ப்பு என்ற மனநிலை சமூகத்தில் வேரோடிப் போயுள்ளது தான் இது மாதிரியான குற்றவாளிகளை உருவாக்கி விடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    தஷ்வந்த் தெரியுமா

    தஷ்வந்த் தெரியுமா

    இந்த நேரத்தில் ஒரு குட்டி பிளாஷ்பேக்கை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஹாசினி என்று சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து தஷ்வந்த் என்ற வாலிபரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீங்கள் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். தஷ்வந்த்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் காவல்துறை அடைத்தது.

    தாயையே கொன்ற தஷ்வந்த்

    தாயையே கொன்ற தஷ்வந்த்

    அப்போது எவ்வளவு செலவு செய்தாவது எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டவர் தஷ்வந்த் தந்தை. அதேபோன்று சொத்துக்களை விற்று, வழக்கை நடத்தி குண்டர் சட்டத்தில் இருந்து ஜாமீனில் வெளியே கொண்டுவந்தனர் அவரது பெற்றோர்கள். அப்புறம் என்ன நடந்தது என்பது வரலாறு. வீட்டில் தனது தாய் சரளாவை, தலையில் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பி ஓடினார் தஷ்வந்த்.

    ஆதரவளிப்பவர்களும் குற்றவாளிகள்

    ஆதரவளிப்பவர்களும் குற்றவாளிகள்

    இந்த வழக்கில் தற்போது தஷ்வந்த் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூரனாக நிற்கிறார். இதிலிருந்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். குற்றம் செய்பவர் மட்டுமல்ல, குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் குற்றவாளிகள் தான். அந்த ஆபத்து அவர்களையே எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும்.

    English summary
    Every parents should remember what was happened to rape accused Daswanth's mother. Pollachi rape accused mother Latha is supporting her son.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X