கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி வழக்கில் நான் சாட்சிதான்.. திருநாவுக்கரசை எனக்கு தெரியாது.. மயூரா ஜெயக்குமார் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருநாவுக்கரசை எனக்கு தெரியாது.. மயூரா ஜெயக்குமார் விளக்கம்- வீடியோ

    கோவை: பொள்ளாச்சி பாலியல், வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிபிசிஐடி காவல்துறையினரிடம் எழுத்து பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகவும், தான் சாட்சி மட்டுமே எனவும் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட, திருநாவுக்கரசு கொடுத்த, வாக்குமூலம் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

    கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, அவருக்கு, அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக, கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசு சிபிசிஐடி காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் பிப்ரவரி 12 ம் தேதி கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்ததாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    EXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்! EXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்!

    வாழ்த்தினார்கள்

    வாழ்த்தினார்கள்

    காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக பதவியேற்ற பின் கோவை வந்த அன்று, கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை. திருநாவுக்கரசு யார் என்றே எனக்கு தெரியாது. நேரடியாகவோ, தொலைபேசியிலோ எந்த தொடர்பும் இல்லை.

    விளக்கம்

    விளக்கம்

    சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராகி எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளேன். பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் திருநாவுக்கரசு வந்ததாக கூறியதால், திருநாவுக்கரசு காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தாரா, இல்லையா என்பதை மட்டுமே சிபிசிஐடியினர் கேட்டனர். சம்மன் அனுப்பபட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. நான் சாட்சி மட்டுமே.

    மடியில் கனமில்லை

    மடியில் கனமில்லை

    இதுதொடராபாக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன். இவ்வழக்கில் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. திருநாவுக்கரசு எந்த இடத்திலும் எனக்கு அவருடன், தொடர்பிருப்பதாக சொல்லவில்லை. திருநாவுக்கரசை காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. திருநாவுக்கரசிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கட்சி ஆபீஸ் வந்துள்ளார்

    கட்சி ஆபீஸ் வந்துள்ளார்

    திருநாவுக்கரசை, கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் திருநாவுக்கரசு மயூரா ஜெயக்குமாரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தார். பிப்ரவரி 12 ம் தேதி திருநாவுக்கரசு கோவை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். திருநாவுக்கரசுடன் எங்களுக்கு எந்த பழக்கமும் இல்லை. திருநாவுக்கரசை மயூரா ஜெயக்குமாருக்கு யார் என்றே தெரியாது. இவ்வாறு ராஜசேகர் தெரிவித்தார்.

    English summary
    CBCID has summoned newly appointed working president of Tamil Nadu Congress Mayura Jayakumar as part of investigation into the shocking pollachi crime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X