கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைதான கனிமொழி எம்.பி விடுவிப்பு... பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சியில் தடையை மீறி கனிமொழி ஆர்ப்பாட்டம்

    பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராக திமுக சார்பாக தடையை மீறி போராட்டம் நடத்தி , கைதான திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை போலீஸ் விடுவித்தது.

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் தடையை மீறி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனை அடுத்து கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்த போலீசார். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

    மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி

    கனிமொழி டிவிட்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. 250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க இந்த வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை திமுக தற்போது கையில் எடுத்து இருக்கிறது.

    பாலியல் வன்முறை சம்பவம்

    பாலியல் வன்முறை சம்பவம்

    இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி செய்திருந்த டிவிட்டில் ''பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    கண்டன ஆர்ப்பாட்டம்

    இந்த நிலையில் கனிமொழி தலைமையில் இன்று பொள்ளாச்சியில் தடையை மீறி திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிறைய பேர்

    நிறைய பேர்

    கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். அதேபோல் பொதுமக்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நீண்ட நாட்களாக

    நீண்ட நாட்களாக

    இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒருவாரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். அதன் ஒருகட்டமாக பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கனிமொழி விடுவிப்பு

    கனிமொழி விடுவிப்பு

    பொள்ளாச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. போராட்டம் நடத்த கூடாது, போராட்டம் காரணமாக பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீஸ் அனுமதி மறுத்து இருந்தது. ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைது செய்யப்பட்டார். அவருடன் ஏராளமான பெண்கள் உட்பட திமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    English summary
    Pollachi Sex Crime: DMK MP Kanimozhi will protest with members in Pollachi today afternoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X