கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. திருநாவுக்கரசு, சபரி மீதான குண்டாஸ் நீக்கம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது புதிய திருப்பத்தை அடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒரு பக்கம் விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள்.

Pollachi Sexual Assault Case: Goondas Act against 2 accused has been revoked

இந்த கும்பல் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்தது அம்பலம் ஆனது. இதில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலைவி படத்திற்கு தடை விதிங்க.. ஹைகோர்ட்டில் தீபா வழக்குதலைவி படத்திற்கு தடை விதிங்க.. ஹைகோர்ட்டில் தீபா வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

English summary
Pollachi Sexual Assault Case: Goondas Act against 2 accused has been revoked by MHC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X