கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்

Google Oneindia Tamil News

Recommended Video

    PMK party Manikandan: பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்!

    கோவை: கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பாமக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற பாடுபடாமல் அவர் மகன் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று ராமதாஸ் நினைப்பதாக பாமகவின் மாநில துணை தலைவராக இருந்து, அக்கட்சியிலிந்து விலகிய பொங்கலூர் ரா.மணிகண்டன் தெரிவித்தார்.

    பாமக துணை தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்தார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தான் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சொன்னதன் அடிப்படையில் நாங்கள் ஆவலோடு பணியாற்றினோம்.

    இன்று முதல் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று சொன்னார்கள். மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தது. பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது

    நேற்று ரஜினி பேட்டி கொடுத்தது தெரியும், இவரை சந்தித்தது தெரியுமா?

    மாற்றி பேசுகிறார்கள்

    மாற்றி பேசுகிறார்கள்

    மிகப்பெரிய பேரம் நடந்தது என்று பின்னர் தான் எங்களுக்கு தெரியும். ஒபிஎஸ் - ஈபிஎஸ் பற்றி தடித்த வார்த்தைகளைக் அன்புமணி பயன்படுத்தினார். இது பேர கூட்டணி. மக்கள் இந்த கூட்டணியைக் கேவலமாக பேசி வருகின்றனர். மாற்றி மாற்றி பேசினால் இவர்களைக் எப்படி நம்புவது.

    கடைகளில் பணம்

    கடைகளில் பணம்

    இவர்கள் நடந்துகிற போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றிற்கு பிறகு ஒரு பெரிய பேரம் உள்ளது. மதுவிலக்குப் போராட்டம் நடத்தினால், எங்கு போராட்டம் நடத்துகிறார்களோ அப்பகுதியில் உள்ள கடைகளிலே பணம் வாங்கி விடுவார்கள்.

    தன்னிச்சை

    தன்னிச்சை

    கழகங்களைக் பற்றி கடுமையாக புத்தகங்களை எழுதினார். இதற்கு பிறகு மக்கள் மத்தியில் இவர்கள் மீது நம்பிக்கை வருமா.
    ராமதாஸ் ஒரு மூத்த அரசியல்வாதி அவரே பொய் பேசலாமா. கட்சியில் யாரையும் கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள்.

    3 கோடி கடன்

    3 கோடி கடன்

    அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள பல நிர்வாகிகள் கட்டபஞ்சாயத்து ,நில அபகரிப்பு செய்து வருகிறார்கள். காடு வெட்டி குரு கட்சிக்கு கடுமையாக உழைத்தவர். அவரது குடும்பம் இன்று ரூ.3 கோடி கடனில் உள்ளது.

    துரோகம்

    துரோகம்


    அவர் மறைவிற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு ஏதும் செய்யவில்லை. பல கூட்டங்களில் குருவைக் பற்றி பேசாதீர்கள். அவரைக் முன்னிலை படுத்தாதீர்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகு ராமதாஸ் குடும்பம் மட்டும் தான் செழிப்பாக இருக்கும்.
    கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை முதல்வராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் இந்த எடப்பாடி.

    கொங்கு மண்டலம்

    கொங்கு மண்டலம்

    அன்புமணிக்கு தொண்டனைக் மதிக்க தெரியாது.
    வியாபார ரீதியாக சிந்திக்கின்ற கட்சியில் இன்னும் செயல்பட முடியாது.
    தமிழகம் முழுவதும் பல நிர்வாகிகள் இன்னும் பாமகவிலிருந்து விலகுவார்கள். பாமகவிற்க்கு பதில் திராவிட கட்சிகளே மேல். திண்டுக்கல் தொகுதியில் கொங்கு மண்டலத்தைக் சேர்ந்தவர்கள் தான் பாமக சார்பில் நிற்கிறார்.

    தினகரன்

    தினகரன்

    அங்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். ஆனால் அங்கு என்னை பணியாற்ற வேண்டாம் என்று சொல்லி அன்புமணிக்கு வேலை செய்ய சொன்னார்கள். அவர் மகன் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் தினகரனே தவிர வேறும் யாரும் உண்மையைக் பேசுவது கிடையாது .அதற்காக அவருடன் நான் இணைவதாக நீங்கள் எண்ண வேண்டாம் என அவர் கூறினார்.

    English summary
    Pongalur Manikandan says that for Ramadoss, Anbumani's victory is alone important. He is not worry about PMK candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X