கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதலை நடத்தி தைரியமிக்க பிரதமர் என காட்டியவர் மோடி. .. பிரேமலதாவின் ஸ்லிப் ஆப் தி டங்!

Google Oneindia Tamil News

கோவை: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடியை ஜெயிக்க வையுங்கள் என பிரேமலதா சொல்வதற்கு பதிலாக புல்வாமா தாக்குதலை நடத்தியதே மோடிதான் என சொல்லி சர்ச்சையில் சி்க்கிக் கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக 4 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தங்கள் கட்சியினரையும் கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் கோவையில் கணபதி பகுதியில் நேற்று இரவு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

உங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்! உங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையில் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்!

உறுதியானவர்

உறுதியானவர்

அப்போது அவர் கூறுகையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்த போது புல்வாமா தாக்குதலை நடத்தி தைரியமிக்க பிரதமர் என்பதை இந்த உலகிற்கே எடுத்துக் காட்டியவர் மோடி. அது போன்று உறுதியானவர்தான் நமக்கு தேவை என்றார்.

பிரேமலதா

பிரேமலதா

இதை கேட்டதும் கூட்டணி கட்சியினரும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எனினும் தான் பேசிய தவறு பிரேமலதாவுக்கு புரியவே இல்லை.

பிரேமலதா பேச்சு

பிரேமலதா பேச்சு

நாட்டுக்கு அச்சுறுத்தலாக வந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததன் மூலம் தைரியமிக்க பிரதமர் என்பதை இந்த உலகிற்கே எடுத்துக் காட்டியவர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பிரேமலதா அர்த்தத்தையே மாற்றி கூறிவிட்டார்.

பாகிஸ்தான் இல்லையா

பாகிஸ்தான் இல்லையா

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னாது புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடிதானா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில்லையா என கேட்கிறார்கள். இன்னும் சிலரோ அப்போ புல்வாமா தாக்குதல் நடத்தியது மோடிதானா, பாகிஸ்தான் இல்லையா என்றும் கேட்டு வருகிறார்கள்.

சிவாஜி பாட்டை எம்ஜிஆர் பாட்டு

சிவாஜி பாட்டை எம்ஜிஆர் பாட்டு

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னாது புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடிதானா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில்லையா என கேட்கிறார்கள். இன்னும் சிலரோ அப்போ புல்வாமா தாக்குதல் நடத்தியது மோடிதானா, பாகிஸ்தான் இல்லையா என்றும் கேட்டு வருகிறார்கள்.

English summary
Premalatha Vijayakant mistakenly says that Pulwama attack was done by PM Narendra Modi, instead of saying suitable reply was given for pulwama attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X