கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்

Google Oneindia Tamil News

கோவை: கொரோனாவும் வெயிலும் நாட்டை கொடூரமாக தாக்கி வரும் நிலையில் இதமாக்கும் வகையில் கோவை, ஈரோடு, பெங்களூரு, பாலாக்காடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இது ஒருபுறம் எனில் மக்கள் வீடுகளில் தூங்க முடியாத அளவிற்கு வீடுகளில் இரவில் புழுக்கம் நீடிக்கிறது. மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பல இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது

 rain in Coimbatore, Ooty, Bangalore. Cool environment at the places

இதனால் மக்கள் வெயிலிடம் இருந்து தப்பிக்க வீடுகளுக்கு உள்ளே முடங்கி வருகின்றனர். ஒருபக்கம் கொரோனா என்றால் மறுபக்கம் வெயில் மக்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து வருகிறது.

சில இடங்களில் அவ்வப்போது வெப்பச்சலனத்தால் மழை பெய்து மக்களை குளிர வைக்கிறது. அந்த வகையில் கோவையிலும், ஊட்டியிலும், பெங்களூரு பகுதியிலும், பாலக்காடு மாவடடத்தின் சில பகுதிகளிலும், இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

English summary
Good rain in Coimbatore, Ooty, Bangalore., Cool environment at tha places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X