கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை.. தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

கோவை: மன்னிப்பு கேட்கா விட்டால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரித்துள்ளது.

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

Rajinikanths house blocked unless he apologized: thanthai periyar dravidar kazhagam warned

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிக்கை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று கூறியிருந்தார்.

அமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையை உடனே தீர்க்க முடியும்: சஞ்சய் ராவத்அமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையை உடனே தீர்க்க முடியும்: சஞ்சய் ராவத்

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
thanthai periyar dravidar kazhagam warned Rajinikanth's house blocked unless he apologized over periyar remarks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X