கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. "நாட்டாமை" அறிவிப்பு..!

Google Oneindia Tamil News

கோவை: உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக சிறிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

samathuva makkal katchi ready to contest civic election

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது, தேர்தலை கண்டு ச.ம.க.அஞ்சியத்ல்லை என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிட தங்கள் கட்சியினர் ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ச.ம.க.போட்டியிடும் எனவும் கூறினார்.

தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி மாவட்ட, ஒன்றிய, வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அதன் பிறகே எந்தெந்த இடத்தில் ச.ம.க.போட்டியிடும் என்பதை அறிவிக்க முடியும் எனக் கூறினார்.

தாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க!தாமரை மலரவே இல்லை.. ஆனாலும் தமிழிசை நிறைந்துவிட்டார்.. இந்த கருத்து கணிப்பு முடிவை பாருங்க!

விருதுநகரில் தாம் கட்டிய காமராஜர் மணி மண்டபம் விரைவில் சுற்றுலா தலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்த சரத்குமார், நாட்டில் பொருளாதார மந்த நிலை உள்ளதாக கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என்றும், ஒரு வேலை அப்படியே இருந்தாலும் நிலைமை படிப்படியாக சீராகும் என தெரிவித்திருக்கிறார் .

தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுபிய கேள்விக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழிசைக்கு ஆளுநர் பொறுபு கிடைத்திருப்பதை வரவேற்க வேண்டும் என பதில் அளித்தார்.

English summary
Samathuva Makkal Katchi is ready to contest civic election, says its president Sarathkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X