கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் மட்டும் ஆட்சியில் இருந்தால்.. தொட முடியுமா?".. சீமான் கேட்ட கேள்வி.. மிரண்டு போன கோவை!

முக ஸ்டாலினை சீமான் சரமாரியாக விமர்சித்தார்

Google Oneindia Tamil News

கோவை: "நான் என்ன கேட்கிறேன், நாங்கள் வேல் கையில் எடுத்து, "முருகன் நம் முப்பாட்டன்"ன்னு சொன்னப்போ, எல்லாரும் என்னை கேலி செய்தாங்களே, இப்போ அதே வேலையை திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் செய்றாங்களே, ஏன்? இப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிற பிரச்சனேயே திமுகதான்.. திமுக தோத்து போய்ட்டாலே, எம் மக்களுக்கு ஒரு பிரச்னையில்லை" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட, "நாம் தமிழர்" கட்சி, வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம், கோவை சின்னியம்பாளையத்தில் நடந்தது. அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் சொல்லும்போது, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.. மொத்தம், 117 பெண்கள், 117 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மார்ச் 20ம் தேதி சென்னையில், 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்வோம்.

 சுற்றுசூழல் பாசறை

சுற்றுசூழல் பாசறை

தேசியக் கட்சிகளுக்கும், திராவிட கட்சிகளுக்கும், எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதை தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்... இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது.

வேல்

வேல்

அதேபோல, இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசு தொழிலாக்கப்படும் என்று நான் சொன்னபோது, எல்லாரும் என்னை கேலி செய்தாங்க.. ஆனால், இப்போ, அதே கட்சிகள் இதையும் பேசிட்டு வர்றாங்க.. அதேமாதிரி, தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், நாங்கள் வேலை கையில் எடுத்தோம். நாங்கள் வேல் கையில் எடுத்து, "முருகன் நம் முப்பாட்டன்"ன்னு சொன்னப்போ, எல்லாரும் என்னை கேலி செய்தாங்களே, இப்போ அதே வேலையை திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் செய்றாங்க. அவர்கள் வாக்குக்காக செய்யறாங்க.. நாங்க அதை உணர்வாக செய்கிறோம்... அவ்வளவுதான் வித்தியாசம்..!

 மக்கள் பிரச்சனை

மக்கள் பிரச்சனை

திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று ஸ்டாலின் சொல்லிட்டு வர்றார்.. ஏன், இதுக்கு முன்னாடி 22 வருஷம் ஆட்சியில் இருந்தாங்களே, அப்போவெல்லாம் ஏன் இதை செய்யவில்லை? அதனால், இப்பவும் இந்த மாதிரி வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாந்துடக்கூடாது. இப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிற பிரச்சனேயே திமுகதான்.. திமுக மட்டும், தோத்து போய்ட்டாலே, எம் மக்களுக்கு ஒரு பிரச்னையுமில்லை.

மீனவர்கள்

மீனவர்கள்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது... தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பை தக்க வைக்க முயற்சி செய்கிறது... பாஜகவை பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக வந்து களத்தில் இறங்கியிருக்கும்... ஆனால், இங்கே தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் வர மாட்டாங்க.. செவி சாய்க்காது... 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதைக் கூட கண்டும், காணாமல் இருக்கிறது... மத்திய, மாநில அரசுகள்தான் இதை தடுக்க வேண்டும்.

கருத்தியல்

கருத்தியல்

இதுவே, நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது... எங்களுக்கென்று தனிகருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்.. உலகின் புகழ்பெற்ற கடற்கரையை திராவிட கட்சிகள் சுடுகாடாக மாற்றி வருகின்றன. இட ஒதுக்கீடு கோட்பாட்டை பொறுத்தவரை, ஐயா ராமதாசை நான் மதிப்பேன்... வன்னியர் மட்டுமின்றி, மற்ற சமூகங்களுக்கும் பெற்று கொடுக்க வேண்டும் என்றார்.

English summary
Seeman says about DMK and Diravidian Parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X