கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூர்வீக நிலத்தில் வாடகை பணத்தை பெறக் கூடாது.. வயதான பெற்றோரை தாக்கி மிரட்டும் மகன்

Google Oneindia Tamil News

கோவை: வாடகை பணம் வாங்க கூடாது என மகன் அடித்து துன்புறுத்துவதாக வயதான தம்பதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

கோவை சிங்காநல்லூர் ராமானுஜ நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் லட்சுமி (80) மற்றும் அவரது கணவர் தாமோதரசாமி. இவர்களது ஐந்தாவது மகன் கார்த்திகேயன். இந்த நிலையில் பூர்வீக நிலத்தில் கிடைக்கும் வாடகை பணத்தை தனது பெற்றோர் வாங்கக் கூடாது என மிரட்டி வந்துள்ளார்.

சீனா அத்துமீறலை விலாவாரியா விவரிச்சாரே ராஜ்நாத்சிங்.. ஆனா 6 மாதமாக ஊடுருவலே இல்லை என்கிறது உள்துறை!சீனா அத்துமீறலை விலாவாரியா விவரிச்சாரே ராஜ்நாத்சிங்.. ஆனா 6 மாதமாக ஊடுருவலே இல்லை என்கிறது உள்துறை!

மூன்று மகன்கள்

மூன்று மகன்கள்

இதுகுறித்து தாமோதரசாமி தம்பதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இது குறித்து லட்சுமி கூறுகையில் மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் தங்களுக்கு ஐந்து மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூன்று மகன்கள் இறந்து போய்விட்டனர்.

பூர்வீக நிலம்

பூர்வீக நிலம்

தற்போது ஐந்தாவது மகன் மற்றும் மகளும் உயிருடன் இருக்கிறார்கள். பூர்வீக நிலத்தில் இருந்து கிடைக்க பெறும் வாடகை வருமானத்தை கொண்டு ஜீவனம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் தனது மகன் கார்த்திகேயன் "நிலத்தில் கிடைக்க பெறும் வாடகையை இனி நீங்கள் பெற கூடாது" என கூறி எங்களை தொடர்ந்து மிரட்டியும் தாக்கியும் வருகிறார்.

கண்மூடித்தனமான தாக்குதல்

கண்மூடித்தனமான தாக்குதல்

பெற்ற தந்தையையே மகன் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவருக்கு தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தற்போது வாடகை பணத்தையும் கார்த்திகேயனே பெற்று கொள்கிறார். இதனால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.

கண்மூடித்தனமான தாக்குதல்

கண்மூடித்தனமான தாக்குதல்

பெற்ற தந்தையையே மகன் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவருக்கு தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தற்போது வாடகை பணத்தையும் கார்த்திகேயனே பெற்று கொள்கிறார். இதனால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.

தற்கொலை

தற்கொலை

தாய், தந்தை என்றும் பாராமல் மோசமான வார்த்தைகளால் பேசுவதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு மகன் கொண்டு சென்றுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து தங்களை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர்.

English summary
Son threatens aged parent in Coimbatore over money dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X