கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி

Google Oneindia Tamil News

சென்னை: பாரம்பரிய நெசவாளர்களின் நலம் காக்கும் தேவாங்கர் சமூக நல மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில், செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள தேவாங்கர் சமுதாய மக்கள், சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள், வீரக்குமாரர்கள் குழுவினர், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தேவாங்கர் ஜகத்குரு ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தயானந்தபுரி மகாராஜ் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

தேவாங்கரின் குல தெய்வம் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன். மல்லிகை கரகம் எடுத்து வரும் போது கத்தி ஜம்தாடு ஏந்தி வீர குமாரர்கள் தங்கள் மீது கத்தி போட்டுக்கொண்டு அம்மனை அழைத்து வருவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தேவாங்கர்குல சமுதாய மக்கள் நாடு முழுவதும் பல பகுதிகளில் சிதறியுள்ளனர். அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

Sri Dayananda puri swamiji hampi invites Devangar Manadu in Coimbatore

தேவாங்கர் சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் கோவையில் மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தேவாங்கர் ஜகத்குரு ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தயானந்தபுரி மகாராஜ் சுவாமிகள் பங்கேற்று நாடு முழுவதும் உள்ள தேவாங்கர் சமுதாய மக்கள் பேரெழுச்சியுடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கல்குறிச்சியில் உள்ள எஸ்ஆர்எஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தயானந்தபுரி மகாராஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முப்பதூர் பட்டத்து எஜமானவர் எம். எம். சிவானந்தம் முன்னிலை வகித்தார்.

Sri Dayananda puri swamiji hampi invites Devangar Manadu in Coimbatore

விழாவில் பேசிய ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் நாமெல்லாம் தேவாங்கர்கள் என்று சொல்லுகிறோம். தேவாங்கர் என்றால் தேவர் மனசு உள்ளவர்கள் என்று அர்த்தம். எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகாதவர்கள். நாமெல்லாம் பண்டிகை சமயங்களில் ஆடுகளையோ, கோழியையோ எந்த உயிரினங்களையும் பலி கொடுப்பது கிடையாது. அம்மனை அழைக்க நமது இரத்தத்தை சிந்தி நம்மையே பலி கொடுத்து கொள்வது நமது தேவாங்கர் குலம் மட்டுமே.

Sri Dayananda puri swamiji hampi invites Devangar Manadu in Coimbatore

அதுவும் இல்லாமல் தேவாங்கர்களுக்கு ஜேண்டர்கள் என்ற பெயர் உண்டு. அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ஜேண்டர்கள் என்றால் பூர்வீக கன்னடத்தில் சூட்சும புத்தி உள்ளவர்கள் என்று அர்த்தம். புத்திசாலிகள் என்று அர்த்தம். தமிழ்நாட்டில் தேவாங்கர் சமுதாயத்தில் நிறைய படித்தவர்கள் இருக்கின்றனர். அரசு நெசவாளர்களுக்கு என ஏராளமான பணத்தை ஒதுக்கினாலும் அது நம் சமுதாய மக்களுக்கு சரியாக வந்து சேருவதில்லை. காரணம் அரசில், அரசியலில் நமது சமுதாய மக்களின் பங்கு குறைவாகவே உள்ளது.

Sri Dayananda puri swamiji hampi invites Devangar Manadu in Coimbatore

தமிழ் நாட்டில் நமது சமுதாய மக்கள் 50 லட்சம் மக்கள் இருக்கிறோம். மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பில் சேர்க்க நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம். இதுவரை கிடைக்க வில்லை. தட்டி கேட்க வேண்டிய சூழ்நிலை வரவேண்டும். தேவாங்கர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, கேரளம், என்று பிரித்து பார்க்க கூடாது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள 8 கோடி தேவாங்கர்கள் அனைவரும் ஒன்றுத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள தேவாங்கர்களை ஒருங்கிணைக்கவே கோவையில் செப்டம்பர் 21ஆம் தேதியன்று மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே நேரடியாக தேவாங்க குல மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்து அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

ஆதி சௌடம்மா நீனு... அத்துசாவர கொலந...ஆதரசி தவளு நீனு...
ஹரி தாசரிடதல்லி...நூலெத்தி பருவாக... அசுராதிகளு பந்து மோத
சிம்ம வாகன தல்லி ஏறி... தண்டெத்தி பந்து கொந்தவளு நீனு
அம்பா ஜெகதாம்ப... ஹரிணியே கொம்பா
நந்தா வனமுந்த... நயக்குன்ன நயக்கிடதாம்பா
சகல சற்குண நிகர்தாம்பா...ஸ்ரீ வீர சௌடதாம்பா என்று கத்தியை கையிலேந்தி அம்மனை அழைக்கும் தேவாங்கர் சமுதாய மக்கள் அனைவரும் இந்த மாநாட்டில் ஒற்றுமையுடன் பங்கேற்க வேண்டும் என்று மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த மாநாட்டு சேவையாளர்கள் K.K.மதிவாணன் 9362023391 K.L.D. குப்புசாமி* 9952100055,P.K.ஜெகநாதன் 9443267196 R.B. ரவி ராமகிருஷ்ண குமார் 9842711178 S.G.பிரபாகரன் 9443916139 K. திருவேங்கடம் 9600966604. அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநாட்டு சேவையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

English summary
Sri Dayananda puri swamiji hampi invites Devangar Manadu in Coimbatore on september 21.Devanga Jagathguru Maharaj sri sri sri Dhayananthapuri Swamiji is a leader of the devanga community and abbot of Gayathri Peedam Hemakooda in Hampi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X