கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசமா சிக்க போறார் காதலி.. நிஜமாகவே அங்கொட லொக்காவை கொன்றது யார்.. 3 நாள் விசாரிக்க சிபிசிபிஐ முடிவு!

Google Oneindia Tamil News

கோவை: கண், காது, மூக்கு மொத்தமும் புது தினுசா மாறி பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கும் அங்கொட லொக்காவின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதேசமயம், இந்த வழக்கில் கைதாகி உள்ள லொக்காவின் காதலியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் அனுமதி வாங்கி உள்ளனர்.

எத்தனையோ கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டவர் இலங்கை தாதா அங்கொட லொக்கா.. முக்கிய கொள்ளைகளின் தலைவன்.. பிரபல போதை பொருள் மன்னன்.. நிழல் உலக தாதா.

இப்படி பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர்.. 2 வருஷத்துக்கு முன்பு இவர் கோவையில் பதுங்கி இருந்தபோதே பெரும் பரபரப்பை இங்கு ஏற்படுத்தியவர்.

கருணாநிதியை நன்றியுடன் நினைவு கூறுக... உச்சநீதிமன்ற தீர்ப்பு மணிமகுடத்தில் ஒரு மாணிக்ககல் -தமிழச்சிகருணாநிதியை நன்றியுடன் நினைவு கூறுக... உச்சநீதிமன்ற தீர்ப்பு மணிமகுடத்தில் ஒரு மாணிக்ககல் -தமிழச்சி

கோவை

கோவை

ஆனால், அப்போது இவர் பதுங்கியிருந்தபோது யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.. இதற்கு காரணம், அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றி கொண்டார்.. அதுமட்டுமல்ல, தன் உருவத்தையும் மாற்றி கொண்டு, கோவையில் பதுங்கி இருந்துள்ளார்.. இவரை இலங்கை அரசு அங்கே தேடி கொண்டிருந்தால், கோவையில் படுபாதுகாப்பாக வந்து செட்டில் ஆகியிருக்கிறார். இலங்கை மட்டுமல்ல, உலக நாடுகள் முழுக்க இவர் போட்டோவை அனுப்பி போலீசார் தேடி கொண்டிருந்தனர்.

 பிரதீப்

பிரதீப்

இவரது புது பெயர் பிரதீப் என்பதாம்.. இறுதியில் கடந்த மாதம் இவர் கோவையில் இறந்துவிட்டார்.. இவர் இறந்து இத்தனை நாள் ஆகியும் அந்த பரபரப்பு இன்னும் குறையவில்லை.. இவரது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சொல்லப்பட்ட முகங்கள் இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.. அந்த புது முக போட்டோக்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டும் உள்ளனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இருந்தாலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி, இவரது கை, கால் விரல் நகங்கள் எல்லாம் புளு கலரில் இருந்திருக்கிறது.. இதுதான் புரியாத புதிராக இருக்கிறது? ஏன் புளு கலருக்கு மாற வேண்டும்? இறந்தது உண்மையிலேயே அங்கொட லொக்காதானா என்ற சந்தேகமும் போலீசாருக்கு இருக்கவே செய்கிறது.

 ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

அதனால் ரத்த மாதிரிகளை வைத்து இவர் அவர்தானா என்பதை கண்டுபிடிக்க போலீசார் அடுத்த முயற்சியில் இறங்கி உள்ளனர்.. அதாவது அங்கொட லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.. அந்த ரத்த மாதிரிகளை கொண்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.. எனவே விரைவில் இறந்தது அவரா? அல்லது வேறு எவரா? என்பது தெரிந்து விடும்.

இதனிடையே அந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. கண், மூக்கு, வாய் என புதுசாக அந்த போட்டோவில் தென்படுகிறார் இந்த தாதா!

 கைது

கைது

இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, வக்கீல் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு சிபிசிஐடி போலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரமாக இந்த விசாரணை நடைபெற்றது. இதையடுத்து 3 பேரையும் விசாரிக்க நீதிபதி அனுமதி தந்தார்.

 விசாரணை

விசாரணை

15 ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரித்து கொள்ளலாம் என நீதிபதி ஸ்ரீகுமார் அனுமதியளித்தார். எனவே இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார் அங்கொட லொக்கா உயிரிழப்பு , போலி ஆவணம் தயாரித்தல் ஆகியவை குறித்து விசாரிக்க இருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் மூவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இறந்தது லொகாடா தான் என்பது தெரியவந்தலையில், தற்போது, இந்த மரண வழக்கில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sri lankan smuggler angoda lokkas plastic surgery photos released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X